லிபியா கடற்கரை பகுதியில் அகதிகளுடன் இத்தாலிக்குச் சென்ற மீட்புக் கப்பலில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. இதையடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், உதவி கோரி நடுக்கடலில் தத்தளித்த மக்களை மீட்டுக் கொண்டு இத்தாலி கப்பல் ஒன்று கேட்டேனியா துறைமுகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. அவர்களுடன் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அந்த கப்பலில் பயணித்துள்ளார். அப்போது அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருந்த மருத்துவ உதவிக்குழு அவருக்கு சிகிச்சை செய்துள்ளனர். தான பயணித்த கப்பலிலேயே அவர் கப்பலிலேயே ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதைக் கப்பலில் இருந்தவர்கள் சோகத்தை மறந்து பாரம்பரிய ஓசை மற்றும் நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர். அந்த குழந்தைக்கு அதிசயம் என பொருள் தரும் மிராக்கிள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பேபி மிராக்கிளை கப்பலில் உள்ளவர்கள் மனமகிழ்ச்சியுடன் கொஞ்சினார்.