7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: 48 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தீபாவளிக்கு முன் பெரிய பரிசுகளைப் பெற உள்ளனர். அவர்களது ஊதியத்தில் நல்ல ஏற்றம் ஏற்படவுள்ளது. புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி எப்போது அங்கீகரிக்கப்படும்?
அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதற்கான ஒப்புதல் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது. மாதத்தின் கடைசி புதன்கிழமை அதாவது அக்டோபர் 25 அன்று அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிக்கப்படலாம். அப்போது மத்திய அரசின் மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்கலாம். இதற்குப் பிறகு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அகவிலைப்படி வழங்கப்படும். ஆண்டின் இரண்டாம் பாதியில் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ந்தால் அது 46 சதவீதமாக அதிகரிக்கும். தற்போது ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
எந்த ஊழியர்களுக்கு பலன் கிடைக்கும்?
7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) ஊதியக்குழுவில் உள்ள ஊழியர்கள் புதிய அகவிலைப்படியின் பலனைப் பெறுவார்கள். இது ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும். இதற்காக ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். எனினும், இந்த காத்திருப்பு வீண் போகாது. ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் வழங்கப்படும். நிலுவைத் தொகை 42 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கும் விகிதத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தில் இருக்கும். கடைசியாக மார்ச் 2023 இல் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரிக்கு பிறகு பரிசு கிடைக்கும்
கடந்த மூன்று வருடங்களின் போக்கைப் பார்த்தால், அக்டோபர் இறுதியில் அகவிலைப்படி (Dearness Allowance) அறிவிக்கப்படும் என தோன்றுகிறது. ஜீ பிசினஸுக்கு கிடைத்த தகவலின்படி, அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வரக்கூடும். ஆனால், இது குறித்து இதுவரை அரசு தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க | Bal Aadhaar Card: குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை!
தீபாவளி நேரத்தில் ஊழியர்களுக்கு லாட்டரி அடிக்கும்
அக்டோபரில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிக்கப்பட்டாலும், இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பலன் நவம்பர் மாதத்திலேயே கிடைக்கும். இது தவிர, தீபாவளியின் போது மத்திய அரசின் கீழ் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டு போனஸ் வழங்கப்படுகிறது. இதனுடன் மூன்று மாத நிலுவைத் தொகையையும் ஊழியர்கள் சேர்த்து பெறுவார்கள்.
ஊழியர்களுடன் சேர்ந்து ஓய்வூதியதாரர்களுக்கும் பரிசுகள்
மத்திய அரசு ஊழியர்களைத் தவிர, ஓய்வூதியம் பெறுவோரும் அகவிலைப்படி உயர்வின் பலனைப் பெறுவார்கள். டிஏவைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் டிஆர் அதே அளவில் அதிகரிக்கிறது. ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கிறதோ அதே அளவு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் அதிகரிக்கும்.
அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்
மத்திய ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி (DA) தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலைக் குறியீட்டால் (AICPI-IW) தீர்மானிக்கப்படுகிறது. அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் நிலையானது.
7th CPC DA% = [{Average of AICPI-IW (Base Year 2001=100) for the last 12 months – 261.42}/261.42x100]
=[{382.32-261.42}/261.42x100]= 46.24.
அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது என்பது கணக்கீட்டில் தெளிவாகிறது.
அகவிலைப்படி 46% ஆகும் என எதிர்பார்ப்பு
7வது ஊதியக் குழுவின் படி, கடந்த 12 மாதங்களில் AICPI-IW இன் சராசரி 382.32 ஆகும். சூத்திரத்தின்படி, மொத்த அகவிலைப்படி 46.24% ஆக இருக்கும். தற்போதைய அகவிலைப்படி விகிதம் 42% ஆகும். அத்தகைய சூழ்நிலையில், ஜூலை 1, 2023 முதல், டிஏவில் 46.24%-42% = 4.24% அதிகரிக்கும். அகவிலைப்படி தசமத்தில் வழங்கப்படாததால், அகவிலைப்படி 4 சதவீதம் வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு சுமார் 9.45% வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ