7th pay commission Gratuity Rules: அகவிலைப்படி மற்றும் வீட்டு கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஊழியர்களின் பணிக்கொடை விதிகளிலும் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. ஊழியர்கள் பெறும் பணிக்கொடை வரம்பை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. பணிக்கொடை தொகையின் வரி விலக்கு வரம்பை மத்திய அமைச்சரவை உயர்த்தியுள்ளது. முன்பு ரூ.20 லட்சமாக இருந்த இந்த வரம்பு தற்போது ரூ.25 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு செய்திருக்கும் இந்த அதிரடி மாற்றத்தால், இனிமேல் ஊழியர்கள் ரூ.25 லட்சம் வரையிலான கிராஜுவிட்டிக்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. அரசின் இந்த மாற்றத்திற்கு முன், வரியில்லா பணிக்கொடை தொகையின் வரம்பு ரூ.20 லட்சமாக இருந்தது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அடிப்படை சம்பளத்துடன் DA இணைக்கப்படுமா? வெளியான தகவல்!
கடந்த 2019 ஆம் ஆண்டு, வரியில்லா பணிக்கொடை தொகையின் வரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி இருந்தது மத்திய அரசு. ஊழியர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தால், அந்த நிறுவனத்திடம் இருந்து பணிக்கொடை கிடைக்கும். புதிய விதிக்ளின் படி, ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்குப் பதிலாக 1 வருடம் மட்டும் வேலைபார்த்தாலும், அங்கும் பணிக்கொடையைப் பெற ஊழியர்களுக்கு உரிமை உண்டு. இப்போதைக்கு இந்தப் புதிய ஃபார்முலாவில் வேலை செய்யலாம். இது குறித்தும் அரசு விரைவில் அரசு முடிவெடுக்கலாம். இந்த முடிவு எடுக்கப்பட்டால் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
use Rent allowance will be increased. Now gratuity limit has reached to 25 lakh rupees - Union Minister @PiyushGoyal… pic.twitter.com/jRcmR88W5y
— All India Radio News (@airnewsalerts) March 7, 2024
கிராசுட்டி என்றால் என்ன?
வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களால் கிராசுட்டி பெறப்படுகிறது. பணிக்கொடைத் தொகையைப் பெற, ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் வேலைபார்த்து இருக்க வேண்டும். பொதுவாக இந்த தொகையானது ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது அல்லது அவர் ஓய்வு பெறும்போது கொடுக்கப்படுகிறது. மேலும் ஊழியருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்த வழக்கில் நாமினிக்கு பணிக்கொடை கிடைக்கும். இந்த பணிகொடையானது சம்பளம் x (15/26) x நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கையில் கணக்கிடப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தார் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஊழியரின் கடைசி சம்பளம் ரூ 50000. இந்தியாவில் ஒரு மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறை என்று கணக்கிடப்படுகிறது. இதனால் மாதத்தில் 26 நாட்கள் மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஒரு வருடத்தில் 15 நாட்களின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது. இறுதியில் ஊழியரின் மொத்த கருணைத் தொகை = (50000) x (15/26) x (20) = 576,923 ரூபாய் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ