மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் வருகிறது டிஏ ஹைக் அறிவிப்பு

7th Pay Commission: அடுத்த டிஏ உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும், மார்ச் 2024ல் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 6, 2024, 08:34 AM IST
  • AICPI குறியீட்டிலிருந்து தெளிவான விவரம்.
  • அலவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
  • 48.67 லட்சம் பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் வருகிறது டிஏ ஹைக் அறிவிப்பு title=

7வது ஊதியக் குழு, சமீபத்திய செய்திகள்: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 4 சதவிகிதம் அதிகரித்த அகவிலைப்படி, 42 சதவிகிதத்திலிருந்து 46 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த உயர்வு ஜூலை 2023 முதல் நடைமுறையில் உள்ளது. தற்போது மற்றொரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கிறது. ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரவேண்டிய அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்கும். 

இந்த முறை 4% டிஏ உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்த டிஏ உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும், மார்ச் 2024ல் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு, அது 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டால், வரும் மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயரும். 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும்போது, அகவிலைப்படி 0 ஆக குறைக்கப்பட்டு, அகவிலைப்படியின் தொகை அடிப்படை சம்பளத்துடன் (Basic Salary) சேர்க்கப்படும்.

AICPI குறியீட்டிலிருந்து தெளிவான விவரம்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கிடுவதற்கான தரவு வெளிவந்துள்ளது. நவம்பர் 2023க்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறியீட்டில் 0.7 புள்ளிகள் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மொத்த அகவிலைப்படி மதிப்பெண் 0.60 சதவீதம் அதிகரித்து 49.68 சதவீதமாக உள்ளது. இனி வரும் நாட்களில் மத்திய ஊழியர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப் போகிறது என்பது தெளிவாகிறது.

அகவிலைப்படி (Dearness Allowance) என்பது பணவீக்கத்தை ஈடுசெய்ய சம்பளத்தின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகை என்பதை மத்திய அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டும். டிஏ (DA) உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். இதே முறையில், அதே கொள்கைகளின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா? புதிய விதிகள் அமல்!

அலவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்தின் சதவீதமாகவும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமனது ஓய்வூதியத் தொகையின் சதவீதமாகவும் வழங்கப்படுகிறது. நிலையான நடைமுறையின்படி, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் திருத்தப்படும் (DA Hike). மேலும் இது தொடர்பான அறிவிப்புகள் பொதுவாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும்.

அகவிலைப்படி உயர்வு, ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. இது விலைவாசி உயர்வின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, நாணயத்தின் மதிப்பு குறைகிறது. இது ஊழியர்களின் வாங்கும் திறனைக் குறைப்பதால், அது அவர்களின் உண்மையான வருமானத்தை பாதிக்கிறது.

48.67 லட்சம் பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்

மார்ச் 22024ல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், மத்திய அரசின் நடவடிக்கையால் சுமார் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) பயனடைவார்கள். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இரண்டுக்கும் சேர்த்து மத்திய கருவூலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூ.12,857 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வங்கிகளை விட பிக்ஸட் டெபாசிக்கு அதிக வட்டியை தரும் பஜாஜ்! எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News