ரயில்வே எடுத்த முக்கிய முடிவு, பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்

Indian Railways: ஓடிசாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துக்குப் பிறகு, தற்போது இந்திய ரயில்வே ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைத்து பயணிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 5, 2023, 05:57 PM IST
  • உயிரிழந்த பயணிகளுக்கு தலா ரூ.10 லட்சம்.
  • ரயிலவேவின் ஹெல்ப்லைன் எண் 139 ஐ அழைக்கலாம்.
  • 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரயில்வே எடுத்த முக்கிய முடிவு, பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் title=

பாலசோர் ரயில் விபத்து: ஞாயிற்றுக்கிழமை நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. ஒடிசாவில் நடந்த இந்த கோர விபத்தில் தற்போது ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில் தற்போது இந்த விபத்துக்குப் பிறகு, இந்திய ரயில்வே ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த அனைத்து பயணிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் ரயில்வே தரப்பில் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரயில்வே தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் அளித்த முக்கிய தகவல்
இந்த நிலையில் இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் இருந்து பெறப்பட்ட உத்தரவை கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளுக்கும் இழப்பீடு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Haunted Railway Stations: இந்தியாவில் உள்ள சில ‘பேய்’ ரயில் நிலையங்கள்!

டிக்கெட்டை பார்க்காமலேயே இழப்பீடு வழங்கப்படும்
இதனிடையே இது குறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பயணிகளிடம் ரயில் டிக்கெட் உள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதேபோல் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பயணியும் ஒரு ஸ்கௌட் அல்லது கைட் செல்கிறார், இவர்கள் காயமைந்தவர்களின் உறவினரைக் கண்டறிய உதவுகின்றனர்.

எந்த பயணிக்கு எத்தனை ரூபாய் கிடைக்கும்?
இது குறித்து தகவல் அளித்துள்ள ரயில்வே அமைச்சர், உயிரிழந்த பயணிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவிர பலத்த காயம் அடைந்த பயணிகளுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

139 இல் அழைக்கலாம்
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது, நீங்கள் ரயிலவேவின் ஹெல்ப்லைன் எண் 139 ஐ அழைக்கலாம். மேலும் இதில் மக்கலைன் அனைத்து கேள்விகளுக்கு ரயில்வே அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர். இதுதவிர, இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினர் எங்களை அழைக்கலாம் என்றும், அவர்களை சந்திப்பதை உறுதி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
இதனிடையே பாலசோரில் நடந்த ரயில் விபத்து அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான ரயில்வே விபத்து
இதற்கிடையல் இந்த விபத்தானது 30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான ரயில்வே விபத்தாகும். ஞாயிற்றுக்கிழமை பாலசோர் டிரிபிள் ரயில் மோதிய இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் 288 பயணிகளின் உயிரைப் பறித்த விபத்து நடந்ததாகக் கூறினார். இதனிடையே, இறப்பு எண்ணிக்கையை ஒடிசா மாநில அரசு குறைத்துச் சொல்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஆனால், பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களை மறைக்க வேண்டும் என்ற அவசியமோ அல்லது எண்ணமோ அரசாங்கத்திற்கு எந்த எண்ணமும் இல்லை என ஒடிசா தலைமைச் செயலாளர் பிகே ஜெனா தெரிவித்தார்.

மேலும் படிக்க | Income Tax: வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனம்... இவர்கள் 30% வரி கட்ட வேண்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News