SCSS: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வந்துள்ள ஜாக்பாட் மாற்றங்கள், அதிகரித்த பலன்கள்

Senior Citizen Saving Scheme: எஸ்சிஎஸ்எஸ் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், வரி விலக்கு மற்றும் முதன்மை பாதுகாப்பு உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 14, 2023, 02:08 PM IST
  • கடந்த காலங்களில், இறந்த அரசு ஊழியர்களின் மனைவி / கணவன் எஸ்சிஎஸ்எஸ் கணக்கு தொடங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
  • எனினும், அரசாங்கம் சமீபத்தில் இந்தத் தடையை நீக்கியது.
  • இதன் பிறகு இவர்கள் SCSS வழங்கும் கவர்ச்சிகரமான அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
SCSS: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வந்துள்ள ஜாக்பாட் மாற்றங்கள், அதிகரித்த பலன்கள் title=

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமான எஸ்சிஎஸ்எஸ் -இல் அரசு மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இறந்த அரசு ஊழியர்களின் கணவன் / மனைவி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட (SCSS) கணக்குகளை உருவாக்கிக்கொள்ள இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு இவர்களுக்கான அத்தியாவசிய நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்சிஎஸ்எஸ் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் (Interest Rate), வரி விலக்கு மற்றும் முதன்மை பாதுகாப்பு உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது 55 வயது அல்லது அதற்கு மேல் ஓய்வு பெற்றவர்கள் இந்த தீட்டத்தில் சேரலாம். 

கடந்த காலங்களில், இறந்த அரசு ஊழியர்களின் மனைவி / கணவன் எஸ்சிஎஸ்எஸ் கணக்கு தொடங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசாங்கம் சமீபத்தில் இந்தத் தடையை நீக்கியது. இதன் பிறகு இவர்கள் SCSS வழங்கும் கவர்ச்சிகரமான அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

கூடுதலாக, ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தின் மூலம், SCSS கணக்குகளை எந்த வித வரம்பும் இல்லாமல் மூன்று வருடங்கள் பல தொடர்ச்சியான பிளாக்குகளாக நீட்டிக்கலாம். இந்த மேம்பாடு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு இதன் பலன்களை பெற முடியும். 

பாதுகாப்பு சேவைகளில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் (சிவிலியன் பாதுகாப்பு ஊழியர்களைத் தவிர) அவர்கள் ஐம்பது வயதை எட்டியவுடன், SCSS கணக்கை தொடங்கலாம். அவர்கள் எந்த வயதில் ஓய்வு பெற்றாலும், அதனால் இதில் சேர்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. 

கூடுதல் சலுகைகள்

கணக்குத் துவங்கும் தேதியில் அறுபது வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். மேலும் முறைப்படி ஓய்வு பெற்ற 55 - 60 வயது வரம்பில் உள்ளவர்களும் இந்த திட்டத்தில் சேரலாம். 

மேலும் படிக்க | திரும்பி பார்க்க வைத்த அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம்: ரிசர்வ் வங்கியின் இலக்கை எட்டுமா?

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு SCSS கணக்கைத் தொடங்குவதற்கான காலக்கெடுவை இந்திய அரசாங்கம் ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு எஸ்சிஎஸ்எஸ் கணக்கை நிறுவ நீண்ட கால அவகாசம் வழங்கி, இந்த திட்டத்தில் கிடைக்கும் ஈர்க்கும் வட்டி விகிதங்கள் மற்றும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கூடுதல் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள அரசின் இந்த மாற்றங்கள் வழி செய்துள்ளதால், சமீபத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அனைவராலும் நன்கு வரவேற்கப்படுகின்றன. 

ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்ட தேதிக்கான சான்றுகளுடன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஓய்வூதிய விவரங்கள், ஓய்வூதியப் பலன்கள் மற்றும் பணியமர்த்தப்பட்டவருடனான வேலைவாய்ப்பு வரலாறு ஆகியவற்றைக் குறிப்பிடும் வகையில் பணியமர்த்தியவர் அளித்த சான்றிதழையும் அளிக்க வேண்டும்.

முன்னதாக, கணக்கு நீட்டிப்பு விண்ணப்பித்த தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று கருதப்பட்டது. எனினும், அரசாங்கம் சமீபத்தில் இந்த விதியை திருத்தியுள்ளது. இப்போது, கணக்கின் நீட்டிப்பு என்பது விண்ணப்ப தேதியைப் பொருட்படுத்தாமல், முதிர்வு தேதியிலிருந்து அல்லது ஒவ்வொரு மூன்று ஆண்டு கால பிளாக் பீரியடின் முடிவிலிருந்தும் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

நீட்டிப்பை நடைமுறைப்படுத்த, கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் படிவம்-4-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.

கணக்கு வைத்திருப்பவர்கள், நீட்டிப்பு விண்ணப்பத்தை எப்போது சமர்ப்பித்தாலும், முதிர்வு தேதியிலிருந்து அல்லது ஒவ்வொரு மூன்று ஆண்டு பிளாக் பீரியடின் முடிவிலிருந்தும் நீட்டிக்கப்பட்ட விகிதத்தில் வட்டியைப் பெறத் தொடங்குவார்கள் என்பதை இது குறிக்கிறது. இந்த மாற்றம் எஸ்சிஎஸ்எஸ் திட்ட முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் மாற்றமாக இருக்கிறது. மேலும், கணக்கு வைத்திருப்பவர்கள் எந்த வட்டியையும் தவறவிடாமல் இருப்பதை இது உறுதிசெய்கிறது.

மேலும் படிக்க | NPS விதிகளில் பெரிய மாற்றம்: இனி உங்கள் பணத்தை எடுக்க இந்த புதிய செயல்முறை அவசியம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News