Amazon India: பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. பொதுவாக, பண்டிகை காலங்கலில் நாம் ஆடைகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் என பல வித பொருட்களை வனகுவது வழக்கம். இந்த நவீன உலகில் இவற்றை வாங்குவது இன்னும் எளிதாகிவிட்டன. எங்கும் சென்று அலையாமல், வீட்டி இருந்தபடியே இந்த நாட்களில் நம்மால் ஷாப்பிங் செய்ய முடிகின்றது. அந்த நிலையில், நீங்களும் வரும் பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செய்ய லிஸ்டுடன் காத்திருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அமேசான் இந்தியா, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் விற்கப்படும் அதன் பல தயாரிப்பு வகைகளில் விற்பனைக் கட்டணத்தில் 12 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த கட்டணக் குறைப்பு செப்டம்பர் 9 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களின் போர்ட்ஃபோலியோவை அமேசான் தளத்தில் விரிவுபடுத்த முடியும். இதைத் தவிர இதன் மூலம் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் காணப்படும் என்ன அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
"பல்வேறு தயாரிப்பு வகைகளில் விற்பனைக் கட்டணங்கள் 3-12 சதவிகிதம் வரை குறைகின்றன. இந்த மாற்றங்கள் காரணமாக, அமேசான் இந்தியாவில் விற்பனையாளர்கள் பயனடைவார்கள்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாருக்கு அதிக பலன் கிடைக்கும்?
500 ரூபாய்க்கும் குறைவான விலையில் பொருட்களை வழங்கும் விற்பனையாளர்களுக்கு புதிய ரேட் கார்ட் குறிப்பாக பயனளிக்கும். "அமேசானில், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் முதல் வளர்ந்து வரும் தொழில்முனைவோர், பிரபல்மான பிராண்டுகள் என அனைத்து வகையான வணிகங்களுக்கும் ஆதரவளிப்பதற்கான நாங்கள் முதலீடு செய்துள்ளோம். இப்போது செய்யப்பட்டுள்ள கட்டணக் குறைப்பு நேரடியாக எங்கள் விற்பனையாளர்கள், குறிப்பாக சிறு வணிகங்களின் கருத்துக்கு நல்ல பதிலை அளிக்கும் வகையில் உள்ளது," என அமேசான் இந்தியாவின் செல்லிங்க் பார்ட்னர் சர்வீசசின் இயக்குனர் அமித் நந்தா தெரிவித்தார்.
பண்டிகை காலத்தை பயன்படுத்திய அமேசான்
அமேசான் அறிவித்துள்ள கட்டணக் குறைப்புகளின் நேரம் இந்தியாவில் பண்டிகைக் காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்த மாற்றங்கள் தற்காலிக நடவடிக்கைகள் அல்ல என்று நிறுவனம் தெரிவித்துள்ளது கனவிக்க வேண்டிய மற்றொரு விஷயமாகும். கட்டணக் குறைப்பு மூலம், தீபாவளி ஷாப்பிங் நெரிசலை சமாளிக்கவும், பண்டிகக் காலத்துக்கு பிறகான ஷாப்பிங் பற்றி திட்டமிடவும் உதவி விற்பனையாளர்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் என நுறுவனம் சார்பில் கூறப்படுகின்றது.
"விற்பனையாளர்கள், குறிப்பாக மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள், அமேசானில் கட்டணங்களில் குறிப்பிடத்தக்க குறைவை அனுபவிப்பார்கள். இது விரைவான வளர்ச்சிக்காக அவர்கள் தங்கள் வணிகத்தில் மீண்டும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும்" என்று நந்தா மேலும் தெரிவ்த்தார்.
இதன் மூலம் அமேசானில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. விற்பனையாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களையும் சென்றடையும்.
மேலும் படிக்க | Defective ITR Notice என்றால் என்ன? இதை சரி செய்வது எப்படி? முழுமையான செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ