ரூ.2000 நோட்டு குறித்து முக்கிய செய்தி வெளியீடு: 2000 ரூபாய் நோட்டு முடிவுக்கு வந்த பிறகு, அதை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ பலரும் வங்கிகளை தொடர்பு கொண்டு வருகின்றனர். 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி நான்கு மாதங்கள் அவகாசம் அளித்திருந்தது. அதன்படி இந்த 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை 30 செப்டம்பர் 2023க்குள் மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்துக்கொள்ளலாம். எனவே நீங்களும் உங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்ய விரும்பினால் கவனமாக இருங்கள். ஏனெல் நீங்கள் வங்கிக்குச் செல்வதற்கு முன், உங்கள் மாநிலத்தில் அழிக்கப்பட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களைச் சரிபார்க்கவும், இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் மாற்றிக்கொள்ளலாம்.
2000 ரூபாய் நோட்டு
மே 19, 2023 தேதி அன்று வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பின்படி, "2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் அல்லது மாற்றும் வசதி செப்டம்பர் 30, 2023 வரை பொதுமக்களுக்கு கிடைக்கும். அதன்படி 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற வேண்டுமானால் இந்த வசதி அனைத்து வங்கிகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு அவர்களின் கிளைகள் மூலம் வழங்கப்படும்." இதுபோன்ற சூழ்நிலையில், செப்டம்பர் 30ம் தேதிக்கு முன், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் நீங்கள் எளிதாக மாற்றிக் கொள்ளவும்.
மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும், இதோ அப்டேட்
வங்கி விடுமுறை பட்டியல்
இருப்பினும், நீங்கள் செப்டம்பர் மாதத்தில் 2000 ரூபாய் நோட்டை மாற்றவோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்யவோ சென்றால், செப்டம்பர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறைகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். சில மாநிலங்களில், ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, கணேஷ் சதுர்த்தி (2வது நாள்) ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
செப்டம்பர் 2023 மாதத்தில் இந்த நாட்களில் வங்கி விடுமுறையாக இருக்கும்
செப்டம்பர் 7 : ஜன்மாஷ்டமி (ஷ்ரவண வத்-8)/ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி
செப்டம்பர் 18 : வரசித்தி விநாயக விரதம்/விநாயக சதுர்த்தி
செப்டம்பர் 19 : விநாயக சதுர்த்தி/சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா)
செப்டம்பர் 20 : விநாயக சதுர்த்தி (2வது நாள்)/நுகாய்
செப்டம்பர் 22 : ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம்
செப்டம்பர் 23 : மகாராஜா ஹரி சிங் ஜி பிறந்தநாள்
செப்டம்பர் 25 : ஸ்ரீமந்த சங்கரதேவரின் ஜன்மோத்ஸவ்
செப்டம்பர் 27 : மிலாத்-இ-ஷெரிப் (முஹம்மது நபி பிறந்த நாள்)
செப்டம்பர் 28 : ஈத்-இ-மிலாத்/ஈத்-இ-மீலாதுன்னபி – (முஹம்மது நபியின் பிறந்தநாள்) (பரா வஃபத்)
செப்டம்பர் 29 : ஈத்-இ-மிலாத்-உல்-நபியைத் தொடர்ந்து இந்திர ஜாத்ரா.
நீங்களும் இதை செய்ய வேண்டும்
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்திவருகிறார்கள் அல்லது ரூ.500, ரூ.100 நோட்டுகளாக மாற்றிப் பெறுகிறார்கள். மேலும் மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்குவதா, வேண்டாமா என செப்டம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | EPFO வட்டி மற்றும் வரவை வீட்டில் இருந்தே சரிபார்க்க வேண்டுமா? 4 ஈஸியான வழிமுறைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ