வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறையினரிடம் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. ஏனெனில் கொரோனா தொற்றுக் காலத்தில் முதலில் இருந்தே ரியல் எஸ்டேட் துறையானது பின்னடைவிலேயே உள்ளது. முன்னதாக பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டிருந்த ரியல் எஸ்டேட் துறையானது, கடந்த ஆண்டில் கொரோனாவால் முடங்கி போனது. இந்த துறையின் வணிகம் மிக மோசமான சரிவினையே கண்டு வருகின்றது. எனவே இந்த துறையினை மீட்டெடுக்க சலுகைகள் இருக்குமா? ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வருமா? என்பதே இந்த துறையினரின் முக்கிய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் விற்பனை 50 சதவீதம் அதிகரித்து இருந்தது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் தொழில் அந்தஸ்தைப் பெற்றால் (ரியல் எஸ்டேட் துறைக்கான தொழில் நிலை), அது மிகவும் வசதியாக இருக்கும். மேலும் நகரங்களில் மலிவு விலை வீடுகள் என்ற அளவீட்டில் நகரங்களில் 45 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது, இதை அதிகரிக்க வேண்டும் எனப் பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன் இதன் வரம்பை ரூ.75-80 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் கோருகின்றனர்.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்தப்படும்...
மேலும், வீட்டுக் கடன் வட்டிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொழில் துறையினரின் கோரிக்கை ஆகும். இந்த விலக்கு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டால் அது மிகவும் சாதகமான இருக்கும்.
அதேபோல் மேலும், வீட்டுக் கடன் வட்டிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொழில் துறையினரின் கோரிக்கை. இந்த விலக்கு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டால் அது மிகவும் சாதகமான நடவடிக்கையாக இருக்கும். இதற்கிடையில் வரவிருக்கும் பட்ஜெட் 2023ல் சிறிய அளவிலான வீட்டுக் கடன்களுக்கு வரி சலுகை அளிக்கப்பட வேண்டும். இதனுடன் மலிவு விலைத் துறைக்கான வாடகை வீடுகளை ஊக்குவிக்க , வாடகை வீட்டுத் திட்டங்களை உருவாக்கும் டெவலப்பர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குவது போன்ற அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிட வேண்டும்.
மேலும் படிக்க | Union Budget 2023: பொது வருங்கால வைப்பு நிதி...ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ