Employment: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வேண்டுமா? 115 காலியிடங்கள்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2021: ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, முக்கியமான தேதிகளைச் சரிபார்க்கவும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2021, 08:46 PM IST
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு
  • அதிகாரிகளுக்கான காலியிடங்கள்
  • மொத்த காலியிடங்கள் 115
Employment: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வேண்டுமா? 115 காலியிடங்கள்  title=

புதுடெல்லி: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

வங்கியில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) நல்லதொரு வாய்ப்பை வழங்குகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான centralbankofindia.co.in இல் பல்வேறு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பொருளாதார நிபுணர், வருமான வரி அதிகாரி (Income Tax Officer), தகவல் தொழில்நுட்பம், நிதி ஆய்வாளர், சட்ட அதிகாரி, இடர் மேலாளர் போன்ற பிரிவுகளுக்கு என மொத்தம் 115 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 17 ஆகும். 

Read Also | ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி: அதிகரிக்கிறதா ஓய்வூதியம்?

மத்திய வங்கி ஆட்சேர்ப்பு 2021 – முக்கிய தேதிகள்:

ஆன்லைன் பதிவுக்கான தொடக்கத் தேதி (Tentative) - நவம்பர் 23, 2021

ஆன்லைன் பதிவுக்கான இறுதித் தேதி (Tentative) - டிசம்பர் 17, 2021

தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் (Tentative) - ஜனவரி 11, 2022

ஆன்-லைன் தேர்வின் தேதி (Tentative) - ஜனவரி 22, 2022

ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Writtern Test) மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

READ ALSO | ஆள் கடத்தலில் கைதான அதிமுக பிரமுகர் - நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News