ஒருவர், உங்கள் டெபிட் கார்டு எண்ணை அணுகி உங்கள் பின் எண்ணைப்போட்டு பணம் எடுக்கும்போது டெபிட் கார்டு மோசடி நடைபெறுகிரது.. குற்றவாளி உங்களுக்குத் தெரியாமல் உங்கள் டெபிட்டில் இருந்து திருட்டுத்தனமாக பொருள் வாங்கலாம் அல்லது பணத்தை எடுக்கலாம். டெபிட் கார்டு மோசடியை தவிர்க்க இந்த வேலையை உடனடியாக செய்யுங்கள், இல்லையெனில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறைந்து போகலாம்.
டெபிட் கார்டின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது வங்கிக் கணக்கு தொடங்குவதே, டெபிட் கார்டு வாங்குவதற்காக என்ற நிலைமையும் ஏற்பட்டுவிட்டது. அதேபோல, டெபிட் கார்டு மோசடியும் நிறைய அதிகரித்துள்ளது. அதிக அளவில் டெபிட் அட்டை மோசடி வழக்குகள் வெளிவருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில், டெபிட் கார்டு மோசடிகளைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்,
டெபிட் கார்டு மோசடி
ஒரு குற்றவாளி உங்கள் டெபிட் கார்டு எண்ணை அணுகி உங்கள் பின்னை திருடும்போது டெபிட் கார்டு மோசடி ஏற்படுகிறது. குற்றவாளி உங்களுக்குத் தெரியாமல் உங்கள் டெபிட்டில் இருந்து அங்கீகரிக்கப்படாத கொள்முதல் அல்லது பணத்தை எடுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், இதைத் தவிர்க்க சில நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம்.
மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு மோசடி: உங்கள் டெபிட் கார்டை எவ்வாறு பாதுகாப்பது? இதோ வழிமுறை
உங்கள் இருப்பு மற்றும் சமீபத்திய பரிவர்த்தனைகளை ஆன்லைனில் சரிபார்க்கவும், பணம் எடுக்கப்படும்போது, அலர்ட் அனுப்புமாறு வங்கி பதிவு செய்யலாம்.
குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக பணம் எடுப்பது அல்லது முகவரி மாற்றம் போன்ற செயல்பாடுகள் உங்கள் கணக்கில் இருக்கும்போது உங்கள் வங்கி மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் உங்களைத் தொடர்பு கொள்ளும்.காகிதமில்லா பேங்க் ஸ்டேட்மெண்ட்டுகளுக்குப் பதிவு செய்வது, உங்கள் இமெயிலில் இருந்து வங்கிக் கணக்குத் தகவல் திருடப்படுவதற்கான வாய்ப்பை நீக்கும்.
ஆன்லைன் கொள்முதல்களுக்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவும், இது டெபிட் கார்டை விட மோசடிக்கு எதிராக அதிக பாதுகாப்பை வழங்குகிறது.
பழைய டெபிட் கார்டை அழிக்கவும். அந்த டெபிட் கார்டு பயன் இல்லை என்றால், அதை சிதைத்து உடைத்துபோடவும். அதிலிருந்து யாரும் எந்தத் தகவல்களையும் எடுத்துவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | OTP மோசடிகளில் இருந்து உங்களைத் தடுப்பது எப்படி? கவனக்குறைவாக இருக்காதீர்கள்
உங்களிடம் பல வங்கிக் கணக்குகள் இருந்தால், உங்கள் பணத்தை ஒரே கணக்கில் வைக்காதீர்கள். குறைந்த பணம் இருக்கும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, தேவையான செலவுகளைச் செய்யுங்கள்.
உங்கள் கணினி மற்றும் மொபைல் சாதனங்களைப் பாதுகாக்கவும். ஃபயர்வால், வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தவும், அதை தொடர்ந்து புதுப்பிக்கவும்.
உங்கள் மொபைல் சாதனங்கள் அல்லது கணினியை பொது இடத்தில் அல்லது பாதுகாப்பற்ற நெட்வொர்க்கில் பயன்படுத்தும் போது ஆன்லைன் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம்.
மேலும் படிக்க | அரசு போர்டல்களில் சாட்போட் வசதி.. பொதுமக்களின் கேள்விகளுக்கு உடனடி பதில்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ