கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட நிறுவனம் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், பறக்கும் கார்கள் என்ற கனவை நனவாக்கியிருக்கிறது. இந்த ஆண்டு நடந்த டெட்ராய்ட்டில் நடைபெற்ற ஆட்டோ ஷோவில், கலிபோர்னியாவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம் 'மாடல் ஏ' என்ற பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது.
இந்த கார் தொடர்பாக கார் தயாரிப்பு நிறுவனம், Alef Aeronautics இணையதளம் சில செய்திகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பறக்கும் கார் வானத்தில் இயங்கும் என்றாலும், வழக்கமான நகர்ப்புற அல்லது கிராமப்புற சாலைகளிலும் தொடர்ந்து ஓட்ட முடியும் என்று கூறுகிறார். குறைந்த வேக வாகனம் (Low Speed Vehicle, LSV) சட்டப்பூர்வ வேகம் மற்றும் பிற வரம்புகளைக் கொண்டுள்ளது.
தரையில் ஓட்டவும், பறக்கவும் கூடிய கார்களைத் தயாரிக்கும், ஏர்கார் மற்றும் பால்-வி கைரோகாப்டர் போன்ற நிறுவனங்களுடன் அலெஃப் நிறுவனத்தின் பறக்கும் கார் போட்டியிடும் என்று நம்பப்படுகிறது.
பறக்கும் கார் எப்படி இயங்கும்?
இந்த கார் செங்குத்தாக காற்றில் பறக்கும் என்று நிறுவனம் குறிப்பிடுகிறது. "விரும்பிய இலக்கை அடையும் வரை அது தடைகளை தாண்டி முன்னோக்கி பறக்க முடியும்." இந்த பறக்கும் கார் எல்லா திசைகளிலும் பறக்க முடியும். அதாவது, முன்னோக்கி, பின்னோக்கி மட்டுமல்ல, வலப்புறம் மற்றும் இடம் புறத்திலும் பறக்கும். அத்துடன் மேலும் மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்கும்.
காரின் பகுதிகளே மேல் மற்றும் கீழ் இறக்கைகளாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு இறக்கைகள் கொண்ட விமானமாக கார் மாறுவது தொடர்பான ஒரு காணொளியையும் அலெஃப் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. தற்போது வழக்கத்தில் இருக்கும் செங்குத்தாக புறப்படும் Opener BlackFly மின்சார விமானத்தை ஒத்திருப்பதாக போர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | கார் வாங்க திட்டமா... ரூ. 2 லட்சம் வரை பம்பர் தள்ளுபடி - உண்மை தான் உடனே பாருங்க!
சுற்று சூழலுக்கு இணக்கமான கார்
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பறக்கும் கார் 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்குகிறது. மாசற்ற சுத்தமான ஆற்றல் வாகனமான 'மாடல் ஏ', காற்றை சுத்தமாக வைத்திருக்க நகரங்களுக்குள் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறுகிறது. நிறுவனம் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் மூலம் காரை இயக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறது. ஆனால் இந்த அம்சம் அதிக செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்குத்தாக புறப்படும் திறனுடன் கூடிய நேர்த்தியான இந்த பறக்கும் கார், பார்ப்பதற்கு மின்சார வாகனத்தை போல இருக்கும், 110 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பறக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
தரையில் ஓடும் காரையே, வானில் பறக்க வைக்க தேவைப்படும் தொழில்நுட்பத்தை சேர்க்கும்போது, காரின் எடையை அதிகரிக்கும் என்றும், கனமான பேட்டரிகள் தேவைப்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
காரின் விலை எவ்வளவு?
பறக்கும் காரின் விலை 300,000 டாலர்கள் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் சுமார் $35,000 அளவுக்கு விலையைக் குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பறக்கும் வாகனத்தின் உற்பத்தி 2025 இறுதிக்குள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Moto E13: 10W சார்ஜிங்... ப்ளூ கலர்... பிளிப்கார்ட் மெகா தள்ளுபடியில் சூப்பர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ