அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: அகவிலைப்படி மட்டுமல்ல, இவர்களுக்கு தீபாவளி போனஸும் கிடைக்கும்

Diwali Bonus and DA Hike: இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மிக அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் தீபாவளி போனஸ், அகவிலைப்படி உயர்வு என  அனைவரின் வங்கிக் கணக்கிலும் கூடுதல் பணம் வரவு வைக்கப்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 29, 2024, 11:17 AM IST
  • மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மிக அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.
  • தீபாவளி போனஸ், அகவிலைப்படி உயர்வு ஆகியவை வரவு வைக்கப்படும்.
  • கணக்கில் பெரிய தொகை வரும்.
அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: அகவிலைப்படி மட்டுமல்ல, இவர்களுக்கு தீபாவளி போனஸும் கிடைக்கும் title=

Diwali Bonus and DA Hike: பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இன்னும் 2 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. மக்கள் இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள் ஆகியவற்றுடன் இந்த நேரத்தில் கிடைக்கும் சலுகைகள், போனஸ் தொகை ஆகியவற்றுக்காகவும் மக்கள் காத்திருப்பது உண்டு. 

இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மிக அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் தீபாவளி போனஸ், அகவிலைப்படி (Dearness Allowaance) உயர்வு என  அனைவரின் வங்கிக் கணக்கிலும் கூடுதல் பணம் வரவு வைக்கப்படும். பலரது வங்கிக் கணக்கில் ஏற்கனவே வந்துவிட்டது.

மாநில அரசு ஊழியர்கள் (State Government Employees)

மத்திய அரசும் பல மாநில அரசுகளும் தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளன. தீபாவளிக்கு முன்னதாகவே ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக பல மாநில அரசுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில், தமிழக அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு (DA Hke) அறிவிப்பை சில நாட்களுக்கு முன்னர் முக ஸ்டாலின் தமைமையிலான தமிழக அரசு அறிவித்தது. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு 17 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இதனுடன் அருணாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன. இந்த மாநிலங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான (Pensioners) அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் அதிகரித்துள்ளன.

தமிழ்நாடு

தமிழக அரசு, மாநில அரசு பணியாளர்களுக்கு 1.7.2024 முதல் 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் காரணமாக ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ரூ.1931 கோடி கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உத்தரப்பிரதேசம்

தீபாவளிக்கு முன்னதாக, ஊழியர்களின் கணக்குகளுக்கு அகவிலைப்படி அனுப்பப்படும். இது ரூ.6,908 ஆக இருக்கும். அக்டோபர் மாத சம்பளமும் கணக்கில் வரவு வைக்கப்படும். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 15 லட்சம் நான்-கெசசட் அரசு ஊழியர்களுக்கு புதன்கிழமை தீபாவளி போனஸை அறிவித்தார். நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு மாத சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவது மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கு ரூ.7,000 வரை போனஸ் கிடைக்கும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: 8வது ஊதியக்குழு.... இந்த நாளில் அறிவிப்பா?

குஜராத்

பண்டிகை காலத்தில் கிளாஸ் 4 பிரிவு ஊழியர்களுக்கு பாஜக தலைமையிலான குஜராத் அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என திங்கள்கிழமை அரசு அறிவித்தது. மாநில அரசின் 17,700 -க்கும் மேற்பட்ட கிளாஸ் 4 பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 வரை பண்டிகை கால போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசு திங்கள்கிழமை அறிவித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இது தொடர்பாக தேவையான அறிவிப்புகளை வெளியிடுமாறு மாநில நிதித்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 3 அதிகரிப்பை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும். இந்த உயர்வுக்கு பிறகு, DA மற்றும் DR 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயரும். இந்த அறிவிப்பால் மாநிலத்தைச் சேர்ந்த 68,818 ஊழியர்கள் பயனடைவார்கள்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்

முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை போனஸ் வழங்குவதாக மோடி அரசு அறிவித்தது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்திற்கு இணையான உற்பத்தித் திறன் இணைக்கப்படாத போனஸ் (Non Productivity Linked bonus) (அட்ஹாக் போனஸ்) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வும் சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. டிஏ உயர்வு, டிஏ அரியர் (DA Arrears), தீபாவளி போனஸ் என ஊழியர்களின் கணக்கில் மிகப்பெரிய தொகை வரவு வைக்கப்படும். 

மேலும் படிக்க | Minimum Balance | வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி.. நவம்பர் 1 முதல் ஆர்பிஐ புதிய ரூல்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News