EPS Pension: ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அளித்த தீபாவளி குட் நியூஸ், முன்னதாகவே கிடைக்கும் ஓய்வூதியம்

EPS Pension: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 என்பது இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 29, 2024, 12:29 PM IST
  • இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி.
  • இபிஎஃப்ஓ வெளியிட்ட அறிக்கை.
  • முழு தகவலை இங்கே காணலாம்.
EPS Pension: ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அளித்த தீபாவளி குட் நியூஸ், முன்னதாகவே கிடைக்கும் ஓய்வூதியம் title=

EPS Pension: இபிஎஃப் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு தீபாவளி சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), EPFO ​​ஆல் மேற்பார்வையிடப்படும் EPS, அதாவது ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (Employee's Pension Scheme) கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் அக்டோபர் மாதம், தங்கள் ஓய்வூதியத்தை வழக்கத்தை விட முன்னதாகவே, அதாவது அக்டோபர் 29, 2024 அன்று பெறுவார்கள் என தெர்வித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கயில் EPFO இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அக்டோபர் 25, 2024 தேதியிட்ட EPFO ​​சுற்றறிக்கையில், “வரவிருக்கும் தீபாவளி பண்டிகை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொது விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதத்துக்கான ஓய்வூதியத்தை அக்டோபர் 29, 2024 அன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தாமதமின்றி முன்கூட்டியே பெற்றுக் கொள்ள இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி விடுமுறை என்பதால் அக்டோபர் 30 ஆம் தேதி ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை எடுத்துக்கொள்ளலாம்.” என கூறப்பட்டுள்ளது.

இது தவிர இது தொடர்பாக EPFO ​​சில அமைப்புகளுக்கு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ள்து. மேலே குறிப்பிட்டவை நிறைவேற்றப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அனைத்து மண்டல மற்றும் பிராந்திய அலுவலகங்களும் தங்கள் வரம்பிற்கு உட்பட்ட ஓய்வூதியங்களை வழங்கும் வங்கிகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்குமாறு EPFO கேட்டுக்கொண்டுள்ளது.

இபிஎஸ் ஓய்வூதியம்

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 என்பது இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: அகவிலைப்படி மட்டுமல்ல, இவர்களுக்கு தீபாவளி போனஸும் கிடைக்கும்

இபிஎஸ் பங்களிப்பு (EPS Contribution)

மாதா மாதன் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF members) தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் (EPF Account) செலுத்துகிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. நிறுவனத்தின் பங்கில் 8.33% இபிஎஸ் கணக்கிலும் (EPS Account) மீதமுள்ள தொகை இபிஎஃப் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகின்றது. 

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வகையான ஓய்வூதியங்கள் கிடைக்கின்றன:

சூப்பரானுவேஷன்: ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்து அவரது வயது 58 ஆக இருந்தால், அவர் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. பணியாளர் விரும்பினால், அவர் தனது ஓய்வூதியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் பெறலாம். 

எர்ளி ஓய்வூதியம்: EPS-ன் கீழ் நீங்கள் ஓய்வூதிய வயதுக்கு முன்னரே ஓய்வூதியம் பெறலாம். அதாவது இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வுக்கு முன்பே ஓய்வூதியம் பெற முடியும். பணியாளர் விரும்பினால், அவர் 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். எனினும், ஒரு ஊழியரின் வயது 50 -க்கு மேல் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்

ஊனமுற்றோர் ஓய்வூதியம்: இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) இந்த வகையான ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் ஆகிறார். இதைப் பெற, 10 ஆண்டுகள் சேவை அல்லது குறைந்தபட்ச வயது வரம்பான 50 வயது ஆகியவற்றை பூர்த்தி செய்யத் தேவையில்லை. 

விதவை மற்றும் குழந்தைகள் ஓய்வூதியம்: இறந்த EPFO ​​உறுப்பினரின் வாழ்க்கைத் துணைக்கு இந்த ஓய்வூதியம் நிதி உதவியை உறுதி செய்கிறது. இந்த அம்சத்தின் மூலம் உயிருடன் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கிறது. கணவன் / மனைவி துணையை இழந்த பிறகு அவர்களின் நிதித் தேவைகளை நிர்வகிக்க இது உதவுகிறது. EPS 95 இன் கீழ் குழந்தைகள் ஓய்வூதியம், இறந்த EPFO ​​உறுப்பினரின் இரண்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் நிதி உதவி வழங்குகிறது. குழந்தைகள் 25 வயதை அடையும் வரை மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். 

அனாதை ஓய்வூதியம்: ஊழியர் இறந்து, அவருக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்றாலோ, அல்லது, அவரும் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தலோ, ஊழியரின் குழந்தைகளுக்கு 25 வயது முடியும் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த மாதாந்திர ஓய்வூதியம் அனாதையான குழந்தைகளின் வளர்ப்புக்கும் கல்விக்கும் உதவுகிறது.

நாமினி ஓய்வூதியம்: EPF உறுப்பினர் தனது மரணத்திற்கு பிறகு ஓய்வூதியம் பெற யாரையாவது நாமினியாக பரிந்துரைத்திருந்தால், அந்த நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். EPFO போர்ட்டலில் ஈ-நாமினேட் செய்யலாம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: 8வது ஊதியக்குழு.... இந்த நாளில் அறிவிப்பா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News