EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?

EPFO Update: பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 22, 2024, 12:48 PM IST
  • எந்த அடிப்படையில் போனஸ் கணக்கிடப்படுகிறது?
  • EPFO, இந்த கூடுதல் போனஸ் தொகையை லாயல்டி மற்றும் லைஃப் நன்மை மூலம் வழங்குகிறது.
  • இபிஎஃப்ஓ கூடுதல் போனஸ் எப்போது கிடைக்கும்?
EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா? title=

EPFO Update: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பிஎஃப் கழிக்கப்படுகின்றது. பிஎஃப் கழிக்கப்படும் இபிஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) ஒரு நல்ல செய்தி உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

இபிஎஃப் சந்தாதாரர்களாக (EPF Subscribers) இருக்கும் ஊழியர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன. பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது. எனினும், இது இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருக்கும் பலருக்குத் தெரிவதில்லை.

EPFO Bonus Facility

சமீபத்தில், வருங்கால வைப்பு நிதி அமைப்பு கூடுதல் போனஸ் பெறும் பயனாளிகளின் பட்டியலையும் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூடுதல் போனஸின் அதிகபட்சத் தொகை ரூ.50,000 வரை இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இபிஎஃப்ஓ -வின் இந்த வசதியை பற்றி பலருக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக இதற்கான தகுதி இருந்தாலும், அவர்களால் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போகின்றது. EPFO இன் இந்த சிறப்பு போனஸ் வசதி பற்றி இங்கே காணலாம்.

Loyalty cum Life Benefit: எந்த அடிப்படையில் போனஸ் கணக்கிடப்படுகிறது?

EPFO, இந்த கூடுதல் போனஸ் தொகையை லாயல்டி மற்றும் லைஃப் நன்மை மூலம் வழங்குகிறது. இதற்கு, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மூலம் போடப்பட்டுள்ள சில நிபந்தனைகள் பூர்த்தி செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு PF பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள் மட்டுமே கூடுதல் போனஸின் பலனைப் பெற முடியும். மேலும், ஒரு ஊழியருக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது அவரது அடிப்படை ஊதியத்தின் படி தீர்மானிக்கப்படுகின்றது. இவற்றை சார்ந்து கூடுதல் போனஸ் கணக்கிடப்படுகிறது. அதிகபட்ச போனஸ் தொகை ரூ 50000 வரை இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ், நிஃப்டி 50 பங்குகள் தலா 1% ஏற்றம்

இந்த வகையில் கணக்கீடு செய்யலாம்

- அடிப்படை சம்பளம் ரூ.5,000 ஆக இருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் போனஸாக தோராயமாக ரூ.30,000 கிடைக்கும். 
- ரூ.10,000 அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு கூடுதல் போனஸ் தொகையாக சுமார் ரூ.40,000 கிடைக்க வாய்ப்புள்ளது.
- சம்பளம் இதற்கு மேல் இருந்தால், போனஸ் தொகை, 50 ஆயிரம் ரூபாய் வரை உயரும். 

குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சேவையில் இருக்க வேண்டும் என்பது போனஸ் பெறுவதற்கான முக்கியமான தகுதி என்பதை மனதில் கொள்வது நல்லது. இதை விட குறைந்த காலத்திற்கு வேலை செய்பவர்கள் அதைக் கோர முடியாது.

Additional Bonus: இபிஎஃப்ஓ கூடுதல் போனஸ் எப்போது கிடைக்கும்?

இபிஎஃப்ஓ அளிக்கும் இந்த கூடுதல் போனஸ் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும். இதன் மூலம் பணி ஓய்வு காலத்தில் ஊழியர்களுக்கு கூடுதல் போனஸ் கிடைப்பது உறுதி செய்யப்படுகின்றது. இதனால் பணியாளர்கள் ஓய்வுகாலத்தில் கூடுதல் பணத்தால் பயனடைவார்கள். 20 வருட சேவையை முடித்திருக்கும் நபர்கள், அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப கூடுதல் போனஸுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் போனஸுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News