Petrol-Diesel price on 2021 8 March: மார்ச் 8ஆம் தேதியன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், தினசரி தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அறிவிக்கின்றன.
டெல்லி மற்றும் மும்பையில் பெட்ரோல் விலை அதிக அளவில் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இருப்பதால், அது இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.
பெட்ரோல்-டீசல் விலை இன்று
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் இன்றைய அறிவிப்பின்படி, புதுடெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol Diesel Price Today) முறையே லிட்டருக்கு ரூ .91.17 ஆகவும், லிட்டருக்கு ரூ .81.47. மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .97.57. டீசலின் விலை லிட்டருக்கு ரூ .88.60 ஆக உள்ளது.
இன்று கொல்கத்தாவில், பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ .91.35 ஆகவும், டீசல் லிட்டருக்கு (Diesel Price) ரூ .84.35 ஆகவும் உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ .93.11 ஆகவும், டீசல் விலை ரூ .86.45 ஆகவும் உள்ளது.
Also Read | International Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்
அந்நிய செலாவணி விகிதங்களுடன் சர்வதேச சந்தையில் கச்சா விலை என்ன என்பதைப் பொறுத்து தினசரி அடிப்படையில் எரிபொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
SMS மூலம் பெட்ரோல் டீசலின் (Petrol Price) விலையை தெரிந்துக் கொள்ளலாம். தினமும் காலை 6 மணிக்கு அன்றைய விலை நிர்ணயிக்கப்படும். இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, நீங்கள் உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் மாறுபடும். ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திற்கு சென்று விலையை தெரிந்துக் கொள்ளலாம்.
உங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசல் விலையை BPCL வாடிக்கையாளர் RSP 9223112222 மற்றும் HPCLவாடிக்கையாளர் HPPrice-க்கு 9222201122 செய்தியை அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Also Read | RIP TO அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR