நேற்று காலை 9 மணி அளவில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது சரக்கு ரயில் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் ஜனாதிபதி வரை பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | ரயில் விபத்துக்கான காப்பீடு... 45 பைசாவிற்கு ரயில் பயணக் காப்பீடு... முழு விபரம்..!!
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து காரணமாக 19 ரயில்களை ரத்து செய்துள்ளது இந்திய ரயில்வே. மேலும் பல ரயில்கள் வேறு பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன. அசாமின் சில்சார் முதல் கொல்கத்தாவில் உள்ள சீல்டா வரை இந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் செல்கிறது. வடக்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரிக்கு அருகில் உள்ள ரங்கபானி நிலையத்திற்கு அருகே சென்று கொண்டு இருந்த போது, பின்னால் இருந்து வந்த சரக்கு ரயில் மோதியுள்ளது. இதில் ரயிலின் மூன்று பெட்டிகள் கடும் சேதமடைந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்
மீட்புப் பணிகள் தீவிரம்
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “துரதிருஷ்டவசமான இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் தற்போது மேற்குவங்கத்தில் நடைபெற்று வருகின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அனைத்து அதிகாரிகளும் சம்பவ இடத்தில் தற்போது உள்ளனர்” என்று மத்திய ரயில்வே அமைச்சர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணை
விபத்து தொடர்பாக உயர்மட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணை இன்று முதல் தொடங்கி உள்ளது என்று விபத்து நடந்த வடகிழக்கு எல்லை ரயில்வேயின் பொது மேலாளர் சேத்தன் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். "ரயில் விபத்து தொடர்பான விசாரணையில் நேரில் பார்த்த சாட்சிகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஆய்வு மற்றும் ரயில்வே அதிகாரிகளின் அறிக்கைகள், பாதுகாப்பு சிக்கல்கள் ஆகியவை முழுமையாக விசாரிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றசாட்டு
இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் தொடர்ந்து நடைபெறும் ரயில்வே விபத்து பற்றி சுட்டிகாட்டி வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியம் காரணம் என்றும், அவர்களை சரிவர வழிநடத்தாத ஆட்சியர்கள் பதவிவிலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு ஒடிசாவில் சிக்னல் பிழை காரணமாக ஏற்பட்ட விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகும் இது போன்ற விபத்து நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ