EPF vs SIP vs PPF: அதிக ஓய்வூதிய நிதியை வழங்கும் திட்டம் எது? முழு கணக்கீடு இதோ

EPF vs SIP vs PPF: EPF, SIP மற்றும் PPF ஆகிய 3 முதலீட்டு விருப்பங்களைப் பற்றியும், இந்த 3 திட்டங்களில் ரூ.12,000 மாதாந்திர முதலீடு செய்தால், இந்த திடங்களின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2024, 09:00 PM IST
  • தனியார் துறை ஊழியர்கள் இபிஎஃப்-ல் முதலீடு செய்கிறார்கள்.
  • இதில் 8.25 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது.
  • EPF இல் ஒரு ஊழியரின் குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ.1,800.
EPF vs SIP vs PPF: அதிக ஓய்வூதிய நிதியை வழங்கும் திட்டம் எது? முழு கணக்கீடு இதோ title=

EPF vs SIP vs PPF: பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு பணம் சேர்த்து வைப்பது மிகவும் அவசியமாகும். இதற்கான பல நல்ல திட்டங்கள் உள்ளன. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), மியூச்சுவல் ஃபண்ட் முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவை ஓய்வூதிய கார்பஸை உருவாக்குவதற்கான சில பிரபலமான வழிகளாக பார்க்கப்படுகின்றன. PPF மற்றும் EPF ஆகியவை நிலையான வட்டி விகிதங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க வரி பலன்களை வழங்குகின்றன. எனினும், SIP சந்தை-இணைக்கப்பட்ட முதலீட்டு முறையாகும். இது EPF மற்றும் PPF ஐ விட ஒப்பீட்டளவில் அதிக வருவாயை வழங்கக்கூடியதாக உள்ளது.

EPF, SIP மற்றும் PPF ஆகிய 3 முதலீட்டு விருப்பங்களைப் பற்றியும், இந்த 3 திட்டங்களில் ரூ.12,000 மாதாந்திர முதலீடு செய்தால், இந்த திடங்களின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

EPF: Employee Provident Fund

- தனியார் துறை ஊழியர்கள் இபிஎஃப்-ல் முதலீடு செய்கிறார்கள், இதில் 8.25 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது.

- குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,000 உள்ள பணியாளர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுடையவர்களாகிறார்கள்.

- EPF இல் ஒரு ஊழியரின் குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ.1,800, அதிகபட்ச பங்களிப்பு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் ஆகும்.

- இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) கணக்கில் நிறுவனமும் சமமான தொகையை வழங்குகிறது.

- முதலாளியின் பங்களிப்பில் இருந்து, 3.67 சதவீதம் ஊழியர்களின் EPF கணக்கிற்கும், 8.33 சதவீதம் அவர்களின் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட (EPS) கணக்கிற்கும் செல்கிறது.

- ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர் இபிஎஸ் பங்களிப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகிறார்.

- ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன.

- இதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை.

மேலும் படிக்க | ஒய்வூதியதாரர்களே உஷார்!! நவம்பர் 30-க்குள் இதை செய்யவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

PPF: Public Provident Fund

- தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளால் நடத்தப்படும் இந்தத் திட்டம், பிபிஎஃப் உறுப்பினர்களுக்கு (PPF Members) தன்னார்வ பங்களிப்புகளை வழங்குகிறது.

- தபால் அலுவலகம் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

- ஒரு நிதியாண்டில் இதில் செய்யப்படும் குறைந்தபட்ச முதலீடு ரூ.500, அதிகபட்ச முதலீடு ரூ.1.50 லட்சம்.

- இது 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் கொண்டது.

- அந்த காலத்திற்குப் பிறகு, இதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். 

- EPF-ஐப் போலவே, ஒரு நிதியாண்டில் PPF இல் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும்.

- இதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத்தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்.

SIP: Systematic Investment Plan

- SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு முறையாகும்.

- மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் தினசரி, மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, ஏற்கனவே திர்மானித்த தொகையை முதலீடு செய்ய இது அனுமதிக்கிறது.

- முதலீட்டாளர் SIP ஐ அதிகரிக்கலாம், குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம்.

- SIP இல் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ.100.

- பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.500 எஸ்ஐபியை வழங்குகின்றன.

EPF: 30 ஆண்டுகளுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் கிடைக்கும ஓய்வூதிய கார்பஸ் எவ்வ்வளவு?
30 ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.43,20,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.1,84,89,110.47 ஆகவும் இருக்கும்.

PPF: 30 ஆண்டுகளுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் கிடைக்கும ஓய்வூதிய கார்பஸ் எவ்வ்வளவு?
ரூ.12,000 மாதாந்திர பங்களிப்பில், 30 ஆண்டுகளில் கிடைக்கும் ஓய்வூதிய கார்பஸ் = ரூ.1,48,32,874

SIP
SIP முதலீட்டில் நிலையான வருமானம் இல்லாததால், 8 சதவீதம் (கடன் நிதி), 10 சதவீதம் (ஹைப்ரிட் ஃபண்ட்) மற்றும் 12 சதவீதம் (ஈக்விட்டி ஃபண்ட்) வருடாந்திர வருமானத்தின்படி கணக்கிடுகிறோம்.

SIP: 30 ஆண்டுகளுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் கிடைக்கும ஓய்வூதிய கார்பஸ் எவ்வ்வளவு? (ஈக்விட்டி ஃபண்ட்)
12 சதவீத வருடாந்திர வளர்ச்சியில், 30 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட கார்பஸ் = ரூ.3,69,71,679.

SIP: 30 ஆண்டுகளுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் கிடைக்கும ஓய்வூதிய கார்பஸ் எவ்வ்வளவு? (ஹைப்ரிட் ஃபண்ட்)
10 சதவீத வருடாந்திர வளர்ச்சியில், 30 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட கார்பஸ் = ரூ.2,49,51,513.

SIP: 30 ஆண்டுகளுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் கிடைக்கும ஓய்வூதிய கார்பஸ் எவ்வ்வளவு? (கடன் நிதி)
12 சதவீத வருடாந்திர வளர்ச்சியில், 30 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட கார்பஸ் = ரூ.1,70,11,359.

மேலும் படிக்க | ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News