ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ ) ஓய்வூதியத் திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது, இந்த மாற்றத்தின் மூலம் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைய போகிறார்கள். அதாவது ஓய்வூதிய அமைப்பானது, அதன் ஓய்வு பெறும் ஊழியர்களை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995) EPS-95 இன் கீழ் டெபாசிட் செய்த தொகையை 6 மாதங்களுக்குள் திரும்பப்பெற அனுமதித்துள்ளது. மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அரசிடம் ஆறு மாத காலத்திற்கும் குறைவான பதவிக்காலம் உள்ள ஊழியர்களும் அவர்களின் இபிஎஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதி குறித்து பரிந்துரை செய்துள்ளது. இதுமட்டுமின்றி 34 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிக்கும் உறுப்பினர்களுக்கு விகிதாச்சார ஓய்வூதிய பலன்களை வழங்கவும் அறங்காவலர் குழு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் ஊழியர்கள் அதிக ஓய்வூதிய பலனை பெறலாம்.
மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டதா? சரிபார்க்க வழிகள்!
இதுவரை ஊழியர்கள் 6 மாதங்களுக்கும் குறைவான சேவையுடன் தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மட்டுமே திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது எடுக்கப்பட்ட புதிய முடிவின்படி ஊழியர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கப்பெறும். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற 232-வது கூட்டத்தில் இபிஎஸ்-95 திட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என மத்திய அறங்காவலர் குழு அரசுக்குப் பரிந்துரை செய்தது.
232-வது கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தான் டெபாசிட்டுகளை திரும்பப்பெறுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. மத்திய அறங்காவலர் குழுவும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் யூனிட்டில் முதலீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ