EPFO Withdrawal Rules: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் 2025 ஆம் ஆண்டில் பல வித மாற்றங்கள் நிகழவுள்ளன. இவை இபிஎஃப் செயலாக்கத்தை இன்னும் எளிதாக்கும் என கூறப்படுகின்றது. புத்தண்டு 2025 -இல் இபிஎஃப் பணம் எடுக்கும் விதிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இபிஎஃப் கணக்குகளை (EPF Account) நிர்வகிக்கின்றது. இபிஎஃப் உறுப்பினர்களின் வசதியை அதிகமாக்கி, செயல்முறைகளை எளிதாக்க, இபிஎஃப்ஓ, அவ்வப்போது விதிகளில் பல வித மாற்றங்களை செய்கிறது. மேலும் புதிய விதிகளையும் அறிமுகம் செய்கிறது. அப்படி இபிஎஃப்ஓ செய்துள்ள ஒரு விதி மாற்றம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரவுள்ளது.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்
அடுத்த ஆண்டு முதல், இபிஎஃப் உறுப்பினர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்தே தங்கள் இபிஎஃப் பணத்தை (EPF Amount) எடுக்க முடியும். இந்த வசதி ஜனவரி 2025 முதல் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சிலர் இது அடுத்த நிதியாண்டு முதல், அதாவது ஏப்ரல் 2025 முதல் அமல்படுத்தப்படும் எனவும் கூறி வருகிறார்கள்.
EPFO ATM Facility:
EPFO அதன் 7 கோடி சந்தாதாரர்களுக்கு இந்த வசதியை வழங்க உள்ளது. இதற்காக டெபிட் கார்டு போன்று சிறப்பு அட்டை வழங்கப்படும். இந்த அட்டை கொண்டு இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) எந்த ஏடிஎம் -இல் வேண்டுமானாலும் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும்.
பிஎஃப் புதிய அமைப்பில் இந்த வசதியும் கிடைக்கும்:
மத்திய தொழிலாளர் செயலாளர் சுமிதா தவ்ரா, புதிய அமைப்பில், இறந்த இபிஎஃப் சந்தாதாரர்களின் வாரிசுகளும் க்ளெய்ம் செட்டில் செய்யப்பட்ட பிறகு, ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
EPFO ATM: எவ்வளவு பணம் எடுக்க முடியும்?
புதிய விதிகளின்படி இபிஎஃப் சந்தாதாரர்களின் மொத்த இபிஎஃப் வைப்புத் தொகையில் (EPF Balance) 50% ஏடிஎம்மில் இருந்து எடுக்க முடியும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
EPF Withdrawal: பணத்தை எடுப்பது எளிதாக இருக்கும்:
தற்போது பிஎஃப் பணத்தை எடுக்க 7 முதல் 10 நாட்கள் ஆகின்றன. எனினும், இந்த புதிய வசதி வந்தவுடன். பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் பணத்தை உடனடியாக எடுக்க முடியும்.
EPF Withdrawal Rules: EPFO இலிருந்து பணம் எடுப்பதற்கான விதிகள்
பொதுவாக, இபிஎஃப் உறுப்பினர்கள் பணி ஓய்வுக்கு பிறகு இபிஎஃப் தொகையை முழுமையாக வித்டிரா செய்கிறார்கள். எனினும், அதற்கு முன்னரும், சில சந்தர்ப்பங்களில் பணத்தை எடுக்க இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது.
- மருத்துவச் செலவுகள்
- திருமணம்
- கல்வி
- குடும்பத்தில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால்
இந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப்ஒ உறுப்பினர்கள் பகுதியளவு தொகையை எடுக்க அனுமதி உள்ளது.
வேலை பறிபோனால் பணத்தை எடுக்கலாம்
- 1 மாதம் வேலையில்லாமல் இருந்தால், நீங்கள் 75% வரை பணத்தை எடுக்கலாம்.
- 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், முழுத் தொகையையும் எடுக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ