உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சிறந்த முதலீடு திட்டம்! எவ்வளவு பணம் வேணாலும் போடுங்க

Post Office Scheme Latest Updates: போஸ்ட் ஆபிஸ் கிசான் விகாஸ் பத்ராவில் (Kisan Vikas Patra) முதலீடு செய்வதன் மூலம், உங்கள் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். தற்போதைய வட்டி விகிதம் 7.5% மற்றும் உத்தரவாதமான பாதுகாப்பு என்பது தான் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 22, 2024, 12:21 PM IST
உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சிறந்த முதலீடு திட்டம்! எவ்வளவு பணம் வேணாலும் போடுங்க title=

Post Office Kisan Vikas Patra Latest News: சிறுக சிறுக பணத்தை சேர்த்து அந்த பணம் இரட்டிப்பாக்க வேண்டும் என ஒவ்வொரு முதலீட்டாளரின் கனவாக உள்ளது. உங்கள் கனவை நனவாக்க உங்களுக்கு அற்புதமான வாய்ப்பை அளிக்கும் ஒரு திட்டம் தான் தபால் அலுவலக கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Post Office Kisan Vikas Patra Scheme). இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது மூலம் உங்கள் பணம் பாதுகாப்பாகவும் மற்றும் உறுதியான வருமானத்தையும் அளிக்கிறது. தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் முதலீடு 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் இரட்டிப்பாகும்.

இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் முதலீடு செய்வது மிகவும் எளிதானது மற்றும் உங்கள் முதலீடு பாதுகாப்புக்கு உத்தரவாதமும் கிடைக்கிறது. ஆபத்து இல்லாமல் தங்கள் சேமிப்பை இரட்டிப்பாக்க விரும்புவோருக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த வழி ஆகும்

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?

எந்தவொரு இந்திய குடிமகனும் தபால் அலுவலக கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், ஒரு கணக்கு, கூட்டுக் கணக்கு அல்லது மூன்று பேர் வரை கூட்டுக் கணக்கு தொடங்கலாம்.

ஒரு மைனர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அவருடைய பாதுகாவலர் (பெற்றோர் / உறவினர்) சார்பாக கணக்கைத் திறக்கலாம். மேலும், 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தனது சொந்த பெயரிலும் கிசான் விகாஸ் பத்ரா கணக்கைத் தொடங்கலாம்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் முதலீடு விதிகள்

இந்தத் திட்டத்தில் முதலீடு வெறும் ரூ.1000 இல் தொடங்கலாம். இதற்குப் பிறகு, 100 இன் மடங்குகளில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வரம்பற்ற கணக்குகளை திறக்க முடியும் என்பது சிறப்பு. முதலீடு செய்யப்பட்ட தொகையின் முதிர்வு தேதி நிதி அமைச்சகத்தால் தீர்மானிக்கப்பட்டு, தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் வட்டி விகிதம் மற்றும் முதலீடு காலம்

தற்போது கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 7.5% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தில் உங்கள் முதலீடு 115 மாதங்களில் இரட்டிப்பாகும். இருப்பினும், கணக்கு வைத்திருப்பவரின் மரணம் அல்லது சில உத்தரவுகள் போன்ற சூழ்நிலைகளின் கீழ், கணக்கு முதிர்ச்சியடைவதற்கு முன்பே முடிக்கப்படலாம்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கணக்கு பரிமாற்றம் மற்றும் பிற வசதிகள்

அஞ்சல் அலுவலக கிசான் விகாஸ் பத்ரா கணக்கை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றலாம். முதலீடுகளை மாற்ற விரும்புவோருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கிசான் விகாஸ் பத்திராவில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீட்டுத் தொகை என்ன?
இந்தத் திட்டத்தில் முதலீடு குறைந்தபட்சம் ₹ 1000 இல் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.

முதிர்வுக்கு முன் கணக்கை மூட முடியுமா?
ஆம், கணக்கு வைத்திருப்பவரின் மரணம் அல்லது நீதிமன்ற உத்தரவு போன்ற சிறப்புச் சூழ்நிலைகளின் கீழ், முதிர்வுக்கு முன் கணக்கை மூடலாம்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வரி விலக்கு உள்ளதா?
கிசான் விகாஸ் பத்ராவில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும், இருப்பினும் சில சிறப்பு சந்தர்ப்பங்களில் விலக்கு அளிக்க வாய்ப்பு வழங்கலாம். ஆனால் அதற்கான சில வழிமுறைகள் இருக்கிறது.

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் சிறார் முதலீடு செய்யலாமா?
ஆம், 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தனது சொந்த பெயரில் கணக்கு தொடங்கலாம்.

மேலும் படிக்க - வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!

மேலும் படிக்க - 25 வயதில் முதலீடு.. வெறும் 15 வருடங்களில் உங்களை கோடீஸ்வரராக்கும் “12-15-20” ஃபார்முலா!

மேலும் படிக்க - புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்: சம்பளம் எகிறப்போகுது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News