உங்கள் PF பணத்தை எடுக்கணுமா... விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள்!

EPFO Withdrawal Rules: அவசர அல்லது முக்கிய செலவுகள் ஏற்பட்டால், பிஎஃப் பணத்தில் இருந்து முன்கூட்டியே பணம் எடுப்பதற்கான முக்கிய ஆதாரமாக பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கருதப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 22, 2023, 08:36 AM IST
  • முன்கூட்டியே பணம் எடுப்பதற்கான பெரிய ஆதாரமாக பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கருதப்படுகிறது.
  • EPF இலிருந்து புத்திசாலித்தனமாக பணத்தை திரும்பப் பெறுங்கள்.
  • உறுப்பினர் படிவம் 31ஐ முதலாளி அல்லது நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் PF பணத்தை எடுக்கணுமா... விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள்! title=

 

EPF அட்வான்ஸ்: அவசர அல்லது முக்கியசெலவுகள் ஏற்பட்டால், முன்கூட்டியே பணம் எடுப்பதற்கான பெரிய ஆதாரமாக பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கருதப்படுகிறது. EPF இலிருந்து புத்திசாலித்தனமாக பணத்தை திரும்பப் பெறுங்கள். ஏனென்றால் நீங்கள் ஒருமுறை பணத்தை எடுத்தால், அதில் பணத்தை திரும்பப் போட முடியாது. EPF முன்பணத்தைப் பெற, உறுப்பினர் படிவம் 31ஐ முதலாளி அல்லது நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, முதலாளி விண்ணப்பத்தை சரிபார்த்து, அதன் பிறகு EPFO ​​க்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பார். ஒப்புதல் கிடைத்ததும், EPF முன்பணம் உறுப்பினரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

EPF உறுப்பினர்கள் தங்கள் EPF கணக்கிலிருந்து பணத்தை எப்போதெல்லாம் எடுக்கலாம்.

மருத்துவ அவசர நிலை

திருமண செலவுகள் 

நிலம் வாங்க

வீட்டில் சீரமைப்பு

வேலையின்மை

PF கணக்கு வைத்திருப்பவர் 7 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த நிலையில், EPF இலிருந்து முன்பணத்தை திரும்பப் பெறலாம்.

நீங்கள் எப்போது முன்பணம் கோரலாம்?

திருமணத்திற்கான EPF முன்பணம் பெறுதல்

EPF உறுப்பினரின் திருமணம்

மகன்/மகளின் திருமணம்

அண்ணன்/சகோதரி திருமணம்

EPFல் இருந்து இவ்வளவு பணத்தை எடுக்கலாம்

நீங்கள் 50% முன்பணத்தை திரும்பப் பெறலாம்

வீடு வாங்குவதற்கு அல்லது வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான EPFO ​​விதிகள்

உங்கள் வீட்டை வாங்குவதற்கு உங்கள் PF இலிருந்து பணத்தை எடுக்கலாம். EPF திட்டத்தின் பிரிவு 68BB இன் படி, நீங்கள் உங்கள் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த EPF இலிருந்து பணத்தையும் எடுக்கலாம். இதற்காக, வீடு உங்கள் தனிப்பட்ட  பெயரில் அல்லது கூட்டுப் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும். வீட்டுக் கடன் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு PF பங்களிப்பைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடித்த பிறகு திரும்பப் பெறும் PF தொகைக்கு வரி இல்லை.

PFல் இருந்து முன்பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகள்

PF இலிருந்து முன்பணத்தை எடுக்க, www.epfindia.gov.in இணையதளத்தின் முகப்புப் பக்கத்தின் மேல் மூலையில் உள்ள ஆன்லைன் அட்வான்ஸ் க்ளைமை கிளிக் செய்யவும். நீங்கள் https://www.epfindia.gov.in/site_en/index.php இல் உள்நுழைய வேண்டும்.

வழிமுறை 1 - உங்கள் UAN மற்றும் கடவுச்சொல் மூலம் UAN உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழையவும்.

வழிமுறை 2 - 'ஆன்லைன் சேவைகள்' தாவலைக் கிளிக் செய்து, EPF இலிருந்து PEP முன்பணத்தை திரும்பப் பெறுவதற்கான படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'உரிமைகோரல் படிவம் (படிவம்-31, 19,10C மற்றும் 10D)' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை 3 - கொடுக்கப்பட்ட சாளரத்தில் உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிட்டு சரிபார்க்கவும்.

வழிமுறை 4 -  சரிபார்த்த பிறகு, Proceed for Online Claim என்பதைக் கிளிக் செய்யவும்

வழிமுறை 5 - டிராப் டவுனில் இருந்து PF அட்வான்ஸைத் தேர்ந்தெடுக்கவும் (படிவம் 31)

வழிமுறை 6 - உங்கள் காரணத்தைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் திரும்பப் பெற விரும்பும் பணத்தை உள்ளிடவும். காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றி உங்கள் முகவரியை எழுதவும்.

வழிமுறை 7 - Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்து, ஆதார் இணைக்கப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTPயை எழுதவும்.

வழிமுறை 8 - இப்பொழுது உங்கள் உரிமைகோரல் தாக்கல் செய்யப்பட்டிருக்கும். பிஎஃப் க்ளெய்ம் பணம் சில நாட்களில் uங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.

மேலும் படிக்க | FD மீதான வட்டி 1.25% அதிகரிப்பு... பிரபல வங்கி கொடுத்துள்ள இன்ப அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News