72 லட்சம் ஊழியர்களுக்கு பயனளிப்பதற்காக அமைச்சரவை சிறு வணிகங்களுக்கு 3 மாதங்களுக்கு EPF தொகையை அரசே செலுத்தும்..!
நாடு முழுக்க வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 24% தொகையை அரசே செலுத்தும் திட்டமும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதர சரிவை சரிக்கட்ட இதில் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சாமனியர்களுக்கு உதவும் வகையில், EPF எனப்படும் ஊழியர்களுக்கான வைப்பு நிதித் தொகையை ஜூன் மற்றும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு அரசே செலுத்த முடிவு எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுக்க வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்கள் செலுத்த வேண்டிய 12 சதவீத பங்கும், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 12 % பங்கும் சேர்த்து, மொத்தம் 24 % தொகையினை அரசே செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் மாதத்திலிருந்தே PF தொகையை மத்திய அரசே செலுத்தி வரும் நிலையில், இது ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
READ | PMGKY கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு..!
இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 72 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்காக மத்திய அரசுக்கு 4,860 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் வரை ரேசனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்க வகை செய்யும் வகையில் பிரதம மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரலில் 74.3 கோடி பேரும் மே மாதத்தில் 74.75 கோடி பேரும் ஜூன் மாதத்தில் 64.72 கோடி பேரும் பயனடைந்துள்ளனர்.
அரசின் இந்த சலுகையை பெற அதிகபட்சமாக 100 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். அதிலும் ஒரு நிபந்தனை உண்டு. அப்படி பணியாற்றும் ஊழியர்களில் 90 % ஊழியர்களின் மாத ஊதியம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்பது அவசியம்.