ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு, வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடன் வாங்கி வீடு வாங்குவதற்கு மக்கள் முன்பை விட அதிகம் செல்வழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நீங்கள் மெட்ரோ நகரங்களில் அல்லது பிற நகரங்களில் உங்கள் கனவு வீட்டை வாங்க திட்டமிட்டிருந்தால், வீடு வாங்கும்போது பொதுவாக பலர் செய்யும் சில தவறுகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது.
மொத்த தொகையை கணக்கிடுங்கள்
நீங்கள் வீடு வாங்கும்போது, கூடுதல் கட்டணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் கனவு இல்லத்தை வாங்குவதற்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக செலவாகலாம். வீடு வாங்கும்போது, தனித்தனியான ஜிஎஸ்டி கட்டணங்கள், பதிவுக் கட்டணம், முத்திரைத் தீர்வை, தரகு, பர்னிஷிங் மற்றும் பிற கட்டணங்கள் விதிக்கப்படலாம். ஆகையால், வீடு போன்ற சொத்துகளில் பணத்தை முதலீடு செய்வதானால், முதலில் அதற்கு ஆகக்கூடிய மொத்தத் தொகையை கணக்கிட வேண்டும்.
வீடு வாங்குவதில் அவசரம் வேண்டாம்
நீங்கள் உங்கள் கனவு இல்லத்தை வாங்க திட்டமிட்டால், ஒரு வீட்டை இறுதி செய்வதற்கு முன்னர், கண்டிப்பாக உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ற குறைந்தது 10 வீடுகளையாவது பார்த்து, ஒப்பிட்டு, ஆராய்ந்து பின்னர் ஒரு நல்ல வீட்டை இறுதி செய்யுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இலவச மற்றும் பேராசை கொண்ட சலுகைகளின் வலையில் சிக்க வேண்டாம் என்றும் இவை மோசடிகளாக இருக்கலாம் என்றும் இவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அம்சங்களை சரிபார்க்கவும்
வீடு வாங்கச் சென்றால், வீட்டின் நான்கு சுவர்கள் பற்றி மட்டும் தெரிந்து கொள்ளாமல், வீட்டில் கிடைக்கும் வசதிகள், தளர்வுகள், தேவைகள், போதிய எண்ணிக்கையில் அறைகள், அவற்றில் போதுமான இடம் மற்றும் இதர சில அம்சங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வாகனம் நிறுத்துவதற்கு போதுமான இடம் இருக்கிறதா இல்லையா என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள், 8%க்கும் மேல் வட்டி
போதிய அளவு விசாரிக்க வேண்டும்
நீங்கள் ஒரு வீட்டை வாங்கப் போகிறீர்கள் என்றால், தனிப்பட்ட ஆராய்ச்சி செய்வது மிகவும் முக்கியம். விலை மற்றும் இருப்பிட விவரங்கள் பற்றிய ஆய்வுடன் இந்த ஆராய்ச்சியை தொடங்கலாம். பின்னர் வீட்டின் அளவு எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது பற்றி முடிவு செய்துகொள்ளுங்கள். மேலும் விற்பனையாளர் யார் என்பதையும், பில்டரின் முந்தை பணிகளை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
கிரெடிட் ஸ்கோர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் ஒரு சொத்தை வாங்க கடனுக்கு விண்ணப்பித்தால், கடன் வழங்குபவர் உங்கள் கடன் வரலாற்றை சரிபார்ப்பார். உங்கள் கடன் வரலாற்றில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வழிவகுக்கும். எனவே கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் சரிபார்ப்பது முக்கியம்.
வீட்டுக் கடன் வாங்கும்போது இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்
அதிக விலைக் கடன்களில் 75 சதவிகிதம் அல்லது குறைந்த விலைக் கடன்களில் 90 சதவிகிதம் நிதியளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடனின் மீதி தொகையை நீங்கள் கொடுக்க வேண்டும். ஆகையால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 20-25 சதவீதத்தை கையில் ரொக்கமாக தயாராக வைத்திருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ