Emergency Fund: அவசரகால நிதி என்றால் என்ன? இதற்கான அவசியம் என்ன? விரைவாக எப்படி சேர்ப்பது?

Emergency Fund: அவசரகால நிதியைப் பற்றி பெரும்பாலானோர் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. எனினும், கடினமான காலங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதே உண்மை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 5, 2024, 06:23 PM IST
  • அவசர நிதி எவ்வளவு இருந்தால் பாதுகாப்பு?
  • இதற்கான சூத்திரம் என்ன?
  • 2 ஆண்டுகளில் அவசர நிதியை சேர்க்கலாம்.
Emergency Fund: அவசரகால நிதி என்றால் என்ன? இதற்கான அவசியம் என்ன? விரைவாக எப்படி சேர்ப்பது? title=

Emergency Fund: நம் மனித வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. பணத்திற்கான தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகமாகலாம். சில அவசர நிலைகளில் பணத்தேவை நமக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை இன்னும் அதிகப்படுத்தக்கூடும். இப்படிப்பட்ட தருணங்களில்தான் அவசரகால நிதி, அதாவது எமர்ஜென்சி ஃபண்ட் நமக்கு பயன்படும். எமர்ஜென்சி ஃபண்ட் என்பது கடினமான காலங்களில் நமக்குப் பயன்படும் தொகையாகும். 

பெரும்பாலும் இன்றைய காலத்தில் பலரும், எதிர்காலத்திற்கான திட்டமிடலைச் செய்கிறார்கள். ஆனால் அவசரகால நிதியைப் பற்றி பெரும்பாலானோர் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. எனினும், கடினமான காலங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதே உண்மை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்மிடம் அதற்கான நிதி தனியாக இல்லையென்றால், எதிர்கால பாதுகாப்பிற்காக நாம் சேர்த்து வைத்திருக்கும் நிதியிலிருந்து நாம் பணத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் இந்த சேமிப்புகள் தீர்ந்து போகும் அல்லது குறையும். இது தவிர, நாம் பணத்தேவைக்காக மற்றவர்களிடம் உதவிக்கரம் நீட்ட வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க, உங்கள் வருவாயில் இரண்டாண்டுகளுக்கு 67:33 என்ற ஃபார்முலாவை பயன்படுத்துங்கள். அதன் பிறகு உங்கள் சேமிப்பை விரைவாக உபயோக்கிக்கவோ அல்லது பிறரிடம் கடன் வாங்கவோ நேரிடாது.  

67-33 Formula: இதற்கான சூத்திரம் என்ன?

- 67:33 சூத்திரத்தைப் பயன்படுத்த, உங்கள் வருவாயை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். 
- வருவாயை 67:33 என்ற விகிதத்தில் பிரிக்க வேண்டும்.
- வருவாயில் 33% தொகையை சேமித்து முதலீடு செய்ய வேண்டும்.
- இந்த தொகையின் உதவியுடன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அவசர நிதியை உருவாக்க முடியும். 
- மீதமுள்ள தொகையை உங்கள் வசதிக்கேற்ப செலவு செய்யலாம். 

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு நபர் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கிறார் என்றால், அவரது சம்பளத்தை ரூ.33,500 மற்றும் ரூ.16,500 எனப் பிரிக்க வேண்டும். இதில், ரூ.16,500 -ஐ அவசர நிதிக்கான சேமிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள ரூ.33,500 -ஐ பிற செலவுகளுக்கு பயன்படுத்தலாம். 

67:33 Formula: அவசர நிதி எவ்வளவு இருந்தால் பாதுகாப்பு?

நிதி நிபுணரான தீப்தி பார்கவா, "வழக்கமாக ஆறு மாதங்களுக்கான அவசர நிதியை உருவாக்குமாறு கூறப்படுகின்றது. ஆனால் குறைந்தபட்சம் 1 வருடத்திற்கான அவசர நிதியை உருவாக்குவது நல்லது. இந்த நிதி ஒரு வருடத்திற்கான உங்கள் மாதாந்திர செலவுகளுக்கு சமமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தின் மாதச் செலவு ரூ.33 ஆயிரமாக இருந்தால், உங்களிடம் ரூ.3,96,000 அதாவது சுமார் ரூ.4 லட்சம் அவசர நிதியாக இருக்க வேண்டும். கடினமான காலங்களில் உங்களிடம் அதிக பணம் இருந்தால், அது உங்களுக்கு நல்லது." என்று கூறுகிறார்.

மேலும் படிக்க | EPF கணக்கில் ஆயிரங்களில் முதலீடு, கோடிகளில் வருமானம்... அசர வைக்கும் கணக்கீடு இதோ

2 ஆண்டுகளில் அவசர நிதியை சேர்க்கலாம்

ஒருவரது மாத ஊதியம் ரூ. 50,000 என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒவ்வொரு மாதமும் 33 சதவீதம் என்ற விகிதத்தில் ரூ.16,500 -ஐ தொடர்ந்து இரண்டு வருடங்கள் சேமித்து வர வேண்டும். இதன் விளைவால், இரண்டு ஆண்டுகளில் ரூ.3,96,000 சேரும். ஆனால் இந்த சேமிப்புத் தொகையை ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால், இரண்டு ஆண்டுகளில் இன்னும் அதிக நிதியை உருவாக்கலாம். 

இதற்கு, சேமிப்புத் தொகையைக் கொண்டு 2 ஆண்டுகால SIP அல்லது RD ஐத் தொடங்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.16,500 எஸ்ஐபி -இல் முதலீடு செய்து, சராசரியாக 12 சதவீதம் வருமானம் பெற்றால், ரூ.3,96,000 முதலீட்டில் வட்டித் தொகையாக ரூ.53,513 பெறலாம். இதன் மூலம் மொத்தமாக ரூ.4,49,513 -ஐ சேர்க்கலாம். இந்த தொகையை கொண்டு 2 ஆண்டுகளுக்கு SBI -இல் தொடர் வைப்பு அதாவது RD -ஐத் தொடங்கினால், 2 ஆண்டுகளில் 6.8 சதவீத வட்டியில் ரூ.29,135 கிடைக்கும். இந்த வழியில் 2 ஆண்டுகளில் ரூ.4,25,135 சேர்க்கலாம்.

விரைவாக பணம் சேர்க்க ஒரு சிறந்த வழி இதோ

ஒரு வேலையை தொடங்கி, ஆரம்ப காலத்தில் சேமிக்கும் பணத்தின் மூலம் தனக்கான அவசரகால நிதியை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி, அதிகபட்ச தொகையை சேமிப்பாக அதில் போடவேண்டும். பணியின் போது, ஊக்கத்தொகை கிடைத்தாலோ அல்லது ஏதேனும் போனஸ் பணம் கிடைத்தாலோ, அதைச் செலவழிப்பதற்குப் பதிலாக, அவசர நிதியில் சேர்க்கலாம். இதன் மூலம் உங்கள் அவசரகால நிதியை இன்னும் வேகமாக சேர்க்க முடியும்.

மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வு, கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்: தீபாவளி பரிசுக்கு தயாராகும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News