Online Driving Licence Apply: இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்கள் எவ்வளவு இன்றியமையாததாக இருக்கின்றதோ அதேபோல வாகன போட்டிகளுக்கும் டிரைவிங் லைசென்ஸ் இன்றியமையாததாக இருக்கின்றது. இரண்டு, மூன்று அல்லது நான்கு என எத்தனை சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு சட்டப்பூர்வமாக டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். நமக்கு தெரிந்தவரை டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமென்றால் ஆர்டிஓவிடம் சென்று, உடல் ரீதியான சில சோதனைகளில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக முடித்துக்காட்ட வேண்டும் என்பது தான். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நாம் சில ஆவணங்களையும் கொடுக்க வேண்டியிருக்கும், இதுதவிர டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு சில சமயங்களில் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.
மேலும் படிக்க | ரேஷன் விதிகளில் அரசு செய்த மிக்கப்பெரிய மாற்றம், இனி இரட்டிப்பு பலன் கிடைக்கும்
ஆனால் இப்போதோ எந்தவொரு ஆவணத்தையும் பெற நாம் அலைந்து திரிய வேண்டியதில்லை, இப்போதெல்லாம் பல நிறுவனங்களும் ஆன்லைனில் தனது சேவைகளை வழங்கி மக்களின் சிரமத்தை குறைக்கிறது. அந்த வகையில் வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் பல முக்கியமான அம்சங்களும் ஆன்லைனில் கிடைக்கப்பெறுகிறது, இதனால் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பிப்பது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. டிரைவிங் லைசென்ஸ் பெற படிவங்கள் நிரப்புவது, கட்டணம் செலுத்துவது என அனைத்தும் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆவண சரிபார்ப்பு போன்ற சில விஷயங்களுக்கு நேரில் செல்ல வேண்டியதிருக்கும். இந்தியாவில் புதிய டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி இங்கே காண்போம்.
முதலில், பரிவஹான் இணையதளத்திற்குச் சென்று அதில் தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து பின்னர் 'அப்ளிக்கேஷன் ஃபார் நியூ லர்னர்ஸ் லைசென்ஸ்' என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு படிவத்தை நிரப்பி அதில் எந்த தவறும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். வேண்டுமென்றால் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் பல முறை மதிப்பாய்வு செய்து கொள்வது நல்லது. பின்னர் சில ஆவணங்கள், புகைப்படங்களைப் பதிவேற்றி, ஆவணத்தில் மின்-கையொப்பமிட வேண்டும். பதிவேற்ற செயல்முறை முடிந்ததும் கட்டணம் செலுத்தி, ஸ்லாட்டை முன்பதிவு செய்து லைசென்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறலாம். ஆதார் அட்டையுடன் கூடிய விண்ணப்பதாரருக்கு, ஆன்லைனில் சோதனை நடத்தப்படலாம், அதுவே ஆதார் அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு பிரத்யேக மையங்களில் சோதனை நடத்தப்படலாம். டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தாலும் சில ஆவணங்களை வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும், இருப்பினும் இந்த விதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். லைசென்ஸ் உங்களுக்கு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு நீங்கள் ஆர்டிஓ-விடம் உடல் ரீதியான சோதனைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | இலவச ரேஷன் விதிகளை மாற்றியது அரசு, இனி கோதுமை, அரிசி...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ