மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாடாளுமன்றத்தில் முக்கிய தகவல்களை அளித்து பேசுகையில், ஏழை குடும்பங்களுக்கு குறைந்த விலையில் எல்பிஜி காஸ் சிலிண்டரை வழங்குவதில் மற்ற நாடுகளை விட அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார் . அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையில் எல்பிஜி விலை, இந்தியாவை விட அதிகமாக உள்ளது. சமீபத்தில், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு பற்றிய தகவலையும் தெரிவித்தார். பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ், தனிநபர் எல்பிஜி சிலிண்டரின் சராசரி பயன்பாடு ஏப்ரல்-அக்டோபர் வரை 3.8 சிலிண்டர்களாக உயர்ந்துள்ளது என்றார். இந்த அளவி 2019-20 ஆம் ஆண்டில் 3.01 சிலிண்டர்கள் என்ற அளவில் இருந்தது என்றும், 2022-23 நிதியாண்டில் இது 3.71 என்ற அளவில் இருந்தது எனவும் குறிப்பிட்டார்.
சிலிண்டர் வெறும் 600 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஏழை குடும்பங்களுக்கு 300 ரூபாய் மானியம் வழங்குகிறது என்று மத்திய அமைச்சர் கூறினார். அத்தகைய சூழ்நிலையில், திட்டத்தின் பயனாளிக்கு டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் ரூ.603க்கு கிடைக்கும். மத்திய அரசின் இந்த திட்டத்தின் பயனாளியாக நீங்கள் இருந்தால், புதுதில்லியில் ரூ.903க்கு வாங்க வேண்டும். பின்னர், 300 ரூபாய் மானியம் நேரடியாக உங்கள் கணக்கிற்கு அனுப்பப்படும். பாகிஸ்தானில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1059.46 என்றும், இலங்கையில் ரூ.1,032.35 என்றும், நேபாளத்தில் ரூ.1,198.56 என்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
எல்பிஜி நுகர்வோர் அதிகரித்துள்ளனர்.
பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட தகவல்
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டு 14 கோடி எல்பிஜி நுகர்வோர் இருந்ததாகவும், தற்போது அது 33 கோடியாக மாறியுள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மட்டும் சுமார் 10 கோடி நுகர்வோர் இருப்பதாக அவர் கூறினார். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் 2016 இல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ஏழை குடும்பங்களுக்கு மலிவு விலையில் எல்பிஜி எரிவாயு பலன் கிடைக்கும்.
PMUY விரிவாக்கத்திற்கான ஒப்புதல்
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2023-24 நிதியாண்டிலிருந்து 2025-26 வரை மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த ஒப்புதல் அளித்துள்ளது. 75 லட்சம் புதிய இணைப்புகள் மூலம், பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும்.
PMUY திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற விண்ணப்பிக்கும் முறை
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், அதிகாரப்பூர்வ இணையதளமான www.pmuy.gov.in ஐப் பார்வையிடவும். இப்போது நீங்கள் 'PMUY இணைப்புக்கு விண்ணப்பிக்கவும்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் வாங்க விரும்பும் எரிவாயு சிலிண்டரைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, ஆவணங்களுடன் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும். நீங்கள் திட்டத்தின் பலனை அடையும் தகுதி பெற்ற நபராக இருந்தால், சில நாட்களில் இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ