Wrong Account Amount Transfer: இப்போதெல்லாம் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் மற்றும் பரிவர்த்தனை செய்யும் போக்கு நாடு முழுவதும் மிக வேகமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இது மக்களின் வசதிகளை அதிகப்படுத்திய இடத்தில், மக்கள் தங்கள் பணத்தை வேறு கணக்கில் மாற்றி அனுப்பும் சம்பவங்களையும் பல இடங்களில் காணப்படுகிறது.
தற்போது போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற ஆன்லைன் பணம் அனுப்பும் UPI செயலிகள் மூலம், வங்கி கணக்கு டூ வங்கி கணக்கிற்கும் நீங்கள் பணத்தை அனுப்பலாம். அதுமட்டுமின்றி வங்கியின் செயலியில் இருந்து தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மட்டுமின்றி வேறு வங்கிகளுக்கும் நீங்கள் வெவ்வேறு அளவிலான தொகையை அனுப்ப இயலும். அதுவும் ஒரு சில நொடிகளில் இதை நீங்கள் செய்யலாம். இருப்பினும், தவறான கணக்கில் பணத்தை மாற்றிய பிறகு, நம் மனதில் உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், நம் பணத்தை திரும்பப் பெற முடியுமா இல்லையா? என்பதுதான். தற்போது இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அறிவுரையை வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்
சமீபத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளர் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டார். இதைத் தொடர்ந்து, எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் புகார் அளித்துள்ளார். எஸ்பிஐ அதிகாரப்பூர்வ கணக்கை (TheOfficialSBI) டேக் செய்து, 'நான் தவறாக எனது பணத்தை தவறான கணக்கிற்கு அனுப்பியுள்ளேன்' என்று அந்த வாடிக்கையாளர் ட்வீட்டில் குறிப்பிட்டால். மேலும், "வங்கி ஹெல்ப்லைன் சொன்னபடி என் கிளையில் எல்லா விவரங்களையும் கொடுத்துள்ளேன். இன்னும் மறுசீரமைப்பு தொடர்பாக எந்த தகவலையும் எனது கிளை எனக்கு தரவில்லை" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | எந்த ஹோட்டல்ல சாப்பிட்டா ஜிஎஸ்டி கட்ட வேண்டாம்? ஹோம் டெலிவரிக்கும் GST உண்டா?
எஸ்பிஐயின் பதில்
இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த எஸ்பிஐ, வாடிக்கையாளர் தவறான கணக்கிற்கு பணம் அனுப்பியிருந்தால், அவர் கணக்கு வைத்திருக்கும் கிளை, மற்ற வங்கிகளுடன் எந்த அபராதமும் இல்லாமல் பின்தொடர்தல் செயல்முறையைத் தொடங்கும் என்று கூறியது. இதுகுறித்து எஸ்பிஐ அந்த ட்வீட்டில்,"வாடிக்கையாளரால் தவறான பயனாளி கணக்கு எண் குறிப்பிடப்பட்டால், வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் கிளையானது எந்த நிதியையும் வசூலிக்காமல், பிற வங்கிகளுடன் பின்தொடர்தல் செயல்முறையைத் தொடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும். கிளையில் இது சம்பந்தமாக ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், https://crcf.sbi.co.in/ccf கீழ் புகார் அளிக்கவும். மேலும் கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் பெட்டியில் உங்கள் பிரச்சனையின் விவரங்களைச் சொல்லுங்கள். சம்பந்தப்பட்ட குழுவினர் ஆய்வு செய்யும்" என்றார்.
please raise a complaint at https://t.co/YdGUw4ByCT under Personal segment/ Individual customer - General Banking/ Branch related/ No response to queries category and mention the details of your issue in the comment box provided. The concerned team will look into it. (2/2)
— State Bank of India (@TheOfficialSBI) June 22, 2023
எஸ்பிஐயின் அறிவுரை
எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறும்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் சரியாக உள்ளிடப்பட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வாடிக்கையாளரால் ஏதேனும் தவறு நடந்தால், அதற்கு வங்கி பொறுப்பேற்காது. பணம் செலுத்துவதற்கு முன் பயனாளிகளின் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டை இருமுறை சரிபார்ப்பது முக்கியம். இது எந்த வகையான தவறுகளையும் தவிர்க்க உதவும் என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் அதிரடி மாற்றங்களை கொண்டு வரும் மத்திய அரசு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ