இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட EPFO கணக்குகளை இணைப்பது எப்படி?

யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.  இதற்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்கிற முகவரிக்கு செல்ல வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Dec 7, 2022, 09:47 AM IST
  • இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை ஒரே கணக்கில் பார்க்க முடியும்.
  • மொபைல் எண்னை இணைப்பதன் மூலம் epfo தொகையை பார்க்க முடியும்.
  • யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் அதை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட EPFO கணக்குகளை இணைப்பது எப்படி? title=

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் இபிஎஃப்ஓ-ன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று கணக்கை இணைக்க வேண்டும் அப்போது தான் அவர்களால் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையை ஒரே கணக்கில் பார்க்க முடியும்.  நீங்கள் எத்தனை பிஎஃப் கணக்கு வைத்திருந்தாலும் அதனை ஆன்லைனில் எளிதாக இணைக்க முடியும்.  இதனை செய்ய நீங்கள் இபிஎஃப்ஓ-ன் ​​அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் ஒன் எம்பிளாய் ஒன் இபிஎஃப் கணக்கு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.  இதனை செய்த பின்னர் இபிஎஃப் கணக்கை இணைப்பதற்கான படிவம் ஒன்று திறக்கப்படும்.

அடுத்ததாக இபிஎஃப் கணக்கில் பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணை உள்ளிட்டு. பின்னர் யூஏஎன் மற்றும் தற்போதைய உறுப்பினர் ஐடியை உள்ளிட வேண்டும், இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும், அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டதும் உங்கள் பழைய பிஎஃப் கணக்குகள் தோன்றும்.  அதன் பிறகு பிஎஃப் கணக்கு எண்ணை பூர்த்தி செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்தபின் கணக்கு இணைப்பதற்கான உங்களது கோரிக்கை ஏற்கப்படும்.  அதேசமயம் இபிஎஃப் தொடர்பான எந்தவொரு வசதியையும் ஆன்லைனில் பெற யூஏஎன் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் படிக்க | SBI: என்ஆர்ஐ வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ! சூப்பர் வட்டி விகிதம் & கால்குலேட்டர்

அப்படி யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் அதை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.  இதற்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்கிற முகவரிக்கு செல்ல வேண்டும், அதில் வலது பக்கத்தில் உள்ள எம்பிளாய் லிங்க்ட் பிரிவில் கிளிக் செய்து, 'நோ யுவர் யூஏஎன்' எண்ணைக் கிளிக் செய்து  பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும்.  அடுத்ததாக பிறந்த தேதியுடன், ஆதார் அல்லது பான் எண்ணை உள்ளிடுவதன் மூலம் யூஏஎன் எண்ணை காணமுடியும்.

இபிஎஃப்ஓ கணக்கை இணைப்பதற்கான செயல்முறை:

1)  https://www.epfindia.gov.in/site_en/ என்கிற அதிகாரபூர்வ இபிஎஃப்ஓ கணக்கிற்கு செல்ல வேண்டும்.

2) இப்போது எனது கணக்கு என்பதைக் கிளிக் செய்யவும். 

3) எனது கணக்குப் பக்கத்தில், கணக்கு விவரங்களின் கீழ், கணக்குகளை ஒன்றிணை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

4) கணக்குகளை ஒன்றிணைத்தல் பக்கத்தில், உங்கள் புதிய கணக்கில் இணைக்க விரும்பும் கணக்குகளின் விவரங்களை உள்ளிடவும். 

5) உங்கள் இபிஎஃப்ஓ ​​கணக்குடன் பல வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால், உங்களின் புதிய வங்கிக் கணக்காக எதைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும். 

6) அதன் பிறகு சேவ் மற்றும் க்ளோஸ் என்பதைக் கிளிக் செய்யவும். 

7)  இப்போது உங்கள் புதிய இணைக்கப்பட்ட இபிஎஃப்ஓ ​​கணக்கு உருவாக்கப்படும்.

மேலும் படிக்க | Gold ATM : இனி தங்கம் வாங்க... ஏடிஎம் போங்க...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News