Income Tax refund: வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2023 என அரசால் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். டிசம்பர் 31 வரை அபராதத்துடன் தாக்கல் செய்ய ஒரு சாளரம் உள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள தனிநபர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும்.
உங்கள் வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்தவுடன், ஈ - வெரிஃபிகேஷன் (e-verification) செயல்முறையை முடிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறினால், உங்கள் ஐடிஆர் செல்லுபடியாகாது. அந்த சூழலில் இரண்டாவது தாக்கல் தேவைப்படும். வரி செலுத்துவோர் ரீஃபண்டு பெறுவதற்கு இது இன்றியமையாதது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலவரப்படி வருமான வரி தாக்கல் செய்த பலருக்கு ரீஃப்ண்ட் வந்து விட்டது. ஆனால், சிலர் இன்னும் இதை பெறாமலும் உள்ளனர். நீங்கள் உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்து குறிப்பிடத்தக்க நேரம் கடந்திருந்து, ஆனால், இன்னும் நீங்கள் உங்கள் ரீஃபண்டை பெறவில்லை, அதற்காக காத்திருக்கிறீர்கள் என்றால், அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும். பல காரணங்களால் உங்கள் ரீஃபண்ட் இன்னும் வராமல் சிக்கி இருக்கலாம். இந்த காரணங்களை ஆராய்வதற்கு முன், உங்கள் ரீஃபண்ட் ஸ்டேடசை ஒருமுறை சரிபார்க்கவும்.
ரீஃபண்ட் வராமல் இருக்க இவை காரணமாக இருக்கலாம்:
1. தகுதி (Eligibility): வரி செலுத்தும் சிலருக்கு ரீபண்ட் பெறுவதற்கான எலிஜிபிலிடி இருக்காது. ரீஃபண்ட் பெறும் தகுதி உங்களுக்கு இருந்து, வரி இணையதளம் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது அதை உறுதிப்படுத்தினால், நீங்கள் ரீஃபண்டை எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | New Tax Regime vs Old Tax Regime முக்கிய அப்டேட்: எது அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டது?
2. துல்லியமான வங்கி விவரங்கள்: உங்கள் வங்கிக் கணக்குத் தகவல் துல்லியமாகவும் முன் சரிபார்க்கப்பட்டதாகவும் (pre-validated) இருக்க வேண்டும். ப்ரீ வேலிடேஷன் அவசியமாகும். இல்லையெனில், உங்களுக்கு ரீஃப்ண்ட் கிடைக்காது. மேலும், உங்கள் பான் கார்டு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து, IFSC குறியீடு உட்பட அனைத்து விவரங்களும் பொருந்துவதை உறுதி செய்யவும்.
ரீஃப்ண்ட் பெறுவதற்கான முக்கிய செயல்முறை:
1. தகுதி உறுதிப்படுத்தல் (Eligibility confirmation): ரீஃபண்ட் பெறுவதற்கான தகுதி நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
2. துல்லியமான வங்கித் தகவல்: உங்கள் வங்கி விவரங்கள் துல்லியமானவையாகவும் முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டவையாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
3. பான் மற்றும் வங்கி இணைப்பு (PAN and bank linkage): உங்கள் பான் விவரங்கள் IFSC குறியீடு உட்பட உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களுடன் ஒத்துப்போக வேண்டும்.
4. சரியான நேரத்தில் சரிபார்ப்பு: ITR சரிபார்ப்பு (ITR verification) செயல்முறையை 30 நாட்களுக்குள் முடிக்கவும். இல்லையெனில், உங்கள் ஐடிஆர் முழுமையானதாகக் கருதப்படாது.
வருமான வரி ரீஃபண்ட் பெற தகுதியுடையவர் யார்?
குறிப்பிட்ட நிதியாண்டில் (FY) ஒருவர் தனது மதிப்பிடப்பட்ட அளவை விட அதிக வரியைச் செலுத்தும் போது, வரி செலுத்திய நபருக்கு திருப்பி அளிக்கப்படும் அந்த கூடுதல் தொகை வருமன வரி ரீஃபண்ட் எனப்படும். நீங்கள் கட்டாய அட்வான்ஸ் வரியைச் செலுத்தும்போது அல்லது உங்கள் வருமானத்தில் TDS விலக்குகளைப் பெற்றிருந்தால் வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கும்.
மேலும் படிக்க | இன்கம் டேக்ஸ் ரீப்ஃண்ட் முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ