குஷியில் வங்கி வாடிக்கையாளர்கள், அதிகரிக்கும் வசதிகள்: வங்கிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கிய நிதி அமைச்சர்

Finance Minister Meeting With Public Sector Bank Heads: பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2024, 12:59 PM IST
  • வங்கிகள் வாடிக்கையாளர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • வங்கித் துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வங்கிகள் அனைத்து விதமான அப்டேட்களையும் வைத்திருக்க வேண்டும்.
  • அனைத்து வங்கிகளும் MSME களுக்கு நிதி உதவியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
குஷியில் வங்கி வாடிக்கையாளர்கள், அதிகரிக்கும் வசதிகள்: வங்கிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கிய நிதி அமைச்சர் title=

Finance Minister Meeting With Public Sector Banks: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. வங்கி செயல்முறைகள் குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில், டெபாசிட் அதிகரிப்பு, டிஜிட்டல் பேமெண்ட், சைபர் செக்யூரிட்டி, கடன் திட்டங்கள், வாடிக்கையாளர் நலத்திட்டங்கள் என பல விஷயங்கள் குறித்து வங்கிகளுடன் நிதியமைச்சர் விவாதித்தார். 

வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்த வேண்டும்: நிதி அமைச்சர்

அனைத்து அரசு வங்கிகளும் வங்கி வாடிக்கையாளர் (Bank Customers) சேவையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் செமி நகர்ப்புற வாடிக்கையாளர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சர் உத்தரவிட்டார். மோசடி மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பாக வங்கிகள், அரசாங்கம், ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். 

பிரதம மந்திரி சூர்ய கர் மற்றும் விஸ்வகர்மா யோஜனா திட்டங்களுக்கு வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட்ட அறிவிப்புகளை செயல்படுத்த வங்கிகள் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரதம மந்திரி சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டம் (PM Surya Ghar Free Electricity Scheme) மற்றும் பிரதம மந்திடி விஸ்வகர்மா யோஜனா திட்டங்களில் (PM Vishwakarma Yojana) வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் செயலாளர் விவேக் ஜோஷி மற்றும் எம் நாகராஜூ மற்றும் அனைத்து வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிதி சேவைகள் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | வங்கி டெபாசிட்களுக்கான காப்பீட்டுத் தொகை வரம்பில் ஏற்றம்? RBI அளித்த முக்கிய அப்டேட்

வங்கிகளின் சொத்து தரம் மேம்பட்டுள்ளது, NPA குறைந்துள்ளது

2024ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் (Public Sector Banks) செயல்பாடு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது திருப்தியை தெரிவித்துள்ளார். வங்கிகளின் சொத்து தரம் மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், நிகர NPA 0.76 சதவீதமாக குறைந்துள்ளது. வங்கிகளின் நிகர லாபம் ரூ.1.45 லட்சம் கோடியாக உள்ளது. இதனுடன் சேர்த்து வங்க்கிகள் ரூ.27,830 கோடி ஈவுத்தொகையை அதாவது டிவிடெண்ட்களை விநியோகித்துள்ளன. இது மட்டுமின்றி, வங்கிகள் சந்தையில் இருந்தும் வெற்றிகரமாக மூலதனத்தை திரட்டியுள்ளன. வங்கிகளின் கடன் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது. அடுத்த கட்டமாக வங்கிகள் இனி வைப்புத்தொகையை அதிகரிப்பதில் வேகமாக செயல்பட வேண்டியிருக்கும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு கடன் நிறைவு ஆவணங்களை வழங்குவதில் அலட்சியமாக இருக்க வேண்டாம்: நிதி அமைச்சர்

- வங்கிகள் வாடிக்கையாளர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார். 

- மேலும், வங்கித் துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அனைத்து விதமான அப்டேட்களையும் வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

- இணைய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இந்த காலத்திற்கு ஏற்றவாறு, அனைத்து வங்கிகளும் தங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் அவ்வப்போது மாற்றங்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ரும் அவர் கூறினார்.

- இது தவிர, அனைத்து வங்கிகளும் MSME களுக்கு நிதி உதவியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சர் வலியுறுத்தினார்.

- இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வங்கிகளுக்கும் நிதியமைச்சர் அறிவுறுத்தினார். 

- வாடிக்கையாளர்கள் பக்கம் பேசிய நிதி அமைச்சர், கடனை திருப்பி கட்டி முடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அனைத்து ஆவணங்களும் சரியான நேரத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பெரிய அப்டேட்: செப்டம்பரில் டிஏ ஹைக்.... டிஏ அரியர் தொகை என்ன ஆச்சு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News