உச்சத்தை எட்டிய பணவீக்கம்: பாகிஸ்தானில் பணவீக்கம் இந்த வாரத்தில் 0.06 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்நாட்டு புள்ளியியல் அலுவலகம் (Pakistan Bureau of Statistics (PBS)) தெரிவித்துள்ளது. இந்த செய்திகளின்படி, சென்சிட்டிவ் பிரைஸ் இன்டிகேட்டர் (Sensitive Price Indicator (SPI)) நாட்டில் இதுவரை இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. பாகிஸ்தானின் வாராந்திர பணவீக்கம் டிசம்பர் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 43.16 சதவீதமாக 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து நுகர்வோரை அழுத்துகின்றன என்று ஒரு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. பணவீக்கத்தின் முக்கிய இயக்கிகள் உணவுப் பொருட்கள் அதிலும் குறிப்பாக சர்க்கரை, பருப்பு வகைகள், முட்டை மற்றும் அரிசி என சொல்லலாம். இவை இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து விலை ஏற்றத்தை பதிவு செய்து வந்துள்ளது.
SPI பணவீக்கம் 40 சதவீதத்திற்கு மேல் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக அதிகரித்துள்ளது. நவம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், SPI 41.9 சதவிகிதம், நவம்பர் 23 (41.13 சதவிகிதம்), நவம்பர் 30 (41.06 சதவிகிதம்), டிசம்பர் 7 (42.68 சதவிகிதம்), இப்போது 43.16 சதவிகிதம்.
மேலும் படிக்க | ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் 365 நாட்களும் இலவசம்..!
தற்போது கடுமையான பணவீக்க அழுத்தத்தை சந்தித்து வரும் பாகிஸ்தானின் வங்கியான, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) இந்த வார தொடக்கத்தில் அதன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 22 சதவிகிதம் என்ற மாற்றாமல் வைத்திருந்தது, ஏனெனில் அது எரிவாயு விலையில் சமீபத்திய உயர்வுக்குப் பிறகு பணவீக்க அழுத்தங்களைத் தளர்த்துவதற்கான அறிகுறிகளுக்காகக் காத்திருந்தது என்று தி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உயர் பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் SBP வட்டி விகிதங்களை மொத்தம் 15 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. ஆனால், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பாகிஸ்தான் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தானில் பங்குச் சந்தைகள் ஊக்கம் பெற்றுள்ளன.
மேலும் படிக்க | செய்யும் எல்லா செலவுக்கும் கேஷ்பேக் வேண்டுமா? சிம்பிள் டெக்னிக் இதுதான்
இது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், அதனால் பொதுமக்களுக்கு நன்மை இல்லை. பாகிஸ்தான் பங்குச் சந்தை உயர்வுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்வுதான் காரணம் ஆகும்.
இதில், சில துறைகளின் செயல்திறன் அதிகமாக இருந்ததால், பங்குச் சந்தை தற்போது வரலாற்று உச்சத்தில் உள்ளது. பாகிஸ்தானில் வங்கிகளின் பங்குகளில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படுகிறது. இது நாட்டில் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக இருப்பதால் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. எண்ணெய் விலை உயர்வால், அந்தத் துறையைச் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளின் பங்குகள் தற்போது அதிக விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ