2021-22 நிதியாண்டிற்கான (ஏய் 2022-23) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 15 ஆம் தேதி இருந்த நிலையில் தற்போது இதற்கான கால அவசாகம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வருமான வரித் துறையிலிருந்து இது குறித்த ஒரு பெரிய அப்டேட்டை வழங்கி உள்ளது. அதன்படி 2021-22 நிதியாண்டிற்கான இ-ஃபைலிங் போர்டல் மூலம் இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமான வருமானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
3 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
வருமான வரித் துறை செய்த ட்வீட்டின் படி, 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கு ஜூலை 25, 2022 வரை 3 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். இதுவரை ரிட்டன் தாக்கல் செய்யவில்லை என்றால், விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என, வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ITR: வருமான வரி தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களின் முழு விபரம் இதோ
www.incometax.gov.in என்ற இணையதளத்தில்,
* ஜூலை 22ஆம் தேதி வரை சுமார் 2.48 கோடி ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
* கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் 2022 தேதி வரை 5.89 கோடி ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
* மார்ச் 15, 2022 அன்று வரை 6.63 கோடிக்கும் அதிகமான வருமானங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
* டிசம்பர் 31 ஆம் 2021 தேதி 46.11 லட்சத்திற்கும் அதிகமான ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டது.
* மார்ச் 15 2021 ஆம் தேதி 5.43 லட்சத்திற்கும் அதிகமான ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜூலை 31க்கு மேல் கால அவகாசம் வழங்கப்படாது
சமீபத்தில், வருவாய்த்துறை செயலாளர், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூலை 31க்கு மேல் நீட்டிக்கும் யோசனை அரசுக்கு இல்லை என்று கூறியிருந்த்து. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும் வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. உங்கள் அலுவலகத்தில் படிவம்-16 கிடைத்திருந்தால், தாமதமின்றி நிரப்பவும்.
ஜூலை 31 என்பது, தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகளின் மதிப்பீட்டிற்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய தேதியாகும், மேலும் அவை முக்கியமாக இந்து பிரிக்கப்படாத குடும்பம், நபர்கள் சங்கம் அல்லது தனிநபர்கள் அமைப்பு தவிர தனிநபர்களை (சம்பளம் உட்பட) ஆகியவை உள்ளடக்கியது. தணிக்கை தேவைப்படும் வணிகங்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும். வணிகம் உள்ளவர்கள் மற்றும் அதில் டிபி அறிக்கை தேவைப்படுபவர்களுக்கு, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2022 ஆகும்.
ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய தேதியை தவறவிட்டால் எவ்வளவு அபராதம்
2022ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் தங்கள் ஐடிஆர் ஐ தாக்கல் செய்ய வேண்டிய மதிப்பீட்டாளர்கள் தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். டிசம்பர் 31 வரை தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அதன்பின்னர் மாதத்திற்கு 1 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க | TDS New Rule: ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும், முழு விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ