Kisan Vikas Patra: கணக்கு திறப்பு, முன்கூட்டியே மூடுவது, மாற்றுவது எப்படி தெரியுமா?

 கிசான் விகாஸ் பத்ரா என்பது ஒரு தபால் அலுவலக சேமிப்புத் திட்டமாகும். முதிர்ச்சியடையும் போது நீங்கள் முதலீடு செய்த தொகையை விட இரு மடங்கு தொகையை வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2021, 07:10 PM IST
  • பாதுகாப்பான முதலீடு கிசான் விகாஸ் பத்திரம்
  • பிறருக்கு மாற்றிக் கொடுக்கலாம்
  • முன்கூட்டியே கணக்கை மூடலாம்
Kisan Vikas Patra: கணக்கு திறப்பு, முன்கூட்டியே மூடுவது, மாற்றுவது எப்படி தெரியுமா? title=

புதுடெல்லி: கிசான் விகாஸ் பத்ரா என்பது ஒரு தபால் அலுவலக சேமிப்புத் திட்டமாகும். முதிர்ச்சியடையும் போது நீங்கள் முதலீடு செய்த தொகையை விட இரு மடங்கு தொகையை வழங்குகிறது.

புத்திசாலித்தனமாக தேர்வு செய்யப்படும் சில முதலீட்டு திட்டங்கள் நீண்ட கால நன்மைகளைத் தரும். அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் தபால் அலுவலகத் திட்டம் (Post Office Schemes) ஆபத்துகள் இல்லாத முதலீட்டு திட்டங்களில் ஒன்று. நம்பிக்கையான கிசான் விகாஸ் பத்திரத்தை எப்படி வாங்குவது? என்பது முதல் முன்கூட்டியே மூடுவது, எப்படி மாற்றுவது என பல முக்கியமான விஷயங்களை தெரிந்துக் கொள்வோம். 

கிசான் விகாஸ் பத்திரத்தை எப்படி வாங்குவது?

  1. தனிநபர்கள் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) வாங்கலாம். இதற்காக தபால் அலுவலகத்தில் கணக்கு திறக்க வேண்டும்.
  2. மூன்று பெரியவர்கள் இணைந்து கூட்டாக கணக்கைத் திறக்கலாம்.
  3. மைனர் சார்பாக அல்லது ஒரு மனநிலையற்ற நபரின் சார்பாக  பாதுகாவலர் ஒருவர் KVP கணக்கைத் திறக்கலாம்.
  4. 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் ஒருவரின் பெயரில் KVP கணக்கைத் துவங்கலாம்.
  5. இந்த திட்டத்தின் கீழ், ஒருவர் பல கணக்குகளை திறக்க முடியும்.

Also Read | உங்கள் ஊதியம் குறையவுள்ளது, EMI கட்டுவது இனி கடினம்

KVP கணக்கை முன்கூட்டியே மூடலாமா?

கிசான் விகாஸ் பத்திரம் (KVP) கணக்கை முதிர்ச்சியடையும் முன் எந்த நேரத்திலும் முன்கூட்டியே மூடலாம். அதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. 

  1. KVP கணக்கு வைத்திருக்கும் தனி நபரின் மரணம் அல்லது கூட்டுக் கணக்கில் உள்ள அனைவரும் மரணமடைந்தால் KVP கணக்கை முதிர்வு காலத்திற்கு முன்னதாகவே மூடலாம். 
  2. நீதிமன்றம் உத்தரவிட்டால் கணக்கு மூடப்படலாம்.
  3. கிசான் விகாஸ் பத்திரம் வாங்கிய இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 

Also Read | ஒரே ஒரு video call மூலம் savings account-ஐத் திறக்கலாம்

KVP பத்திரத்தை பிறருக்கு மாற்றிக் கொடுப்பது… 

  1. KVP பத்திரத்தை ஒருவர் மற்றொருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம்.
  2. ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்ற முடியும். 
  3. பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்பினால் கிசான் விகாஸ் பத்திரம் வாங்கப்பட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பிறருக்கு மாற்றிக் கொடுக்கலாம்.

KVP-ஐ பின்வரும் சூழ்நிலைகளில் மாற்ற முடியும்-

  1. கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அவர் நியமித்த நியமனதாரர்கள் அல்லது அவரது சட்ட வாரிசுகளுக்கு கிசான் விகாஸ் பத்திரம் மாற்றப்படலாம்.
  2. KVP கணக்கு வைத்திருக்கும் தனி நபரின் மரணம் அல்லது கூட்டுக் கணக்கில் உள்ள அனைவரும் மரணமடைந்தால் முதிர்வு காலத்திற்கு முன்னதாகவே மூடலாம். 
  3. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கணக்கு மூடப்படலாம்.
  4. பத்திரத்தை குறிப்பிட்ட நிறுவனத்திடம் KVP பத்திரத்தை அடகு வைத்திருந்தால் கணக்கு மாற்றப்படலாம்.

Also Read | PF பணம் எடுப்பதில் பிரச்சனையா? இந்த Whatsapp helpline number மூலம் உதவி பெறலாம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News