புதுடெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று பணமாக்கலாம் என்று பண மோசடி வழக்குகளைக் கையாளும் PMLA நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு வசதியாக மல்லையாவின் சொத்துக்களை வங்கியில் ஒப்படைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு (Enforcement Directorate) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலமாக நாட்டிலிருந்து தலைமறைவாக உள்ள சாராய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடன்களை திருப்பித் தரவில்லை. அவர் நாட்டில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் வசிக்கிறார்.
பண மோசடி தடுப்பு சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ், அவரது சொத்துக்களை விற்க PMLA நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
Also Read | தேடுபொறியில் 'Tank Man' காணாமல் போன மர்மம் என்ன bill gates?
இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மல்லிகார்ஜுனா ராவ் கூறுகையில், “விஜய் மல்லையாவின் சில ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மற்றும் பத்திரங்களை விற்று 5,600 கோடி ரூபாய் நிலுவை கடனை வசூலிக்க அனுமதி கிடைத்துள்ளது. நாட்டின் முக்கிய வங்கிகள் இந்த சொத்துக்களை விற்பனை செய்யும். “பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, மல்லையா கொடுக்க வேண்டிய கடன் ஒப்பீட்டளவில் குறைவு தான். அதிக கடன் கொடுத்திருக்கும் முக்கிய வங்கிகள் இந்த சொத்தை விற்கும்போது, பி.என்.பி.க்கு கிடைக்க வேண்டிய கடனு திரும்பக் கிடைத்து விடும்” என்று குறிப்பிட்டார்.
PMLA court has given permission to banks to sell certain real estate properties & securities belonged to disgraced tycoon Vijay Mallya to recover dues loan amount of over Rs 5,600 crore. It was earlier under ED: Mallikarjuna Rao, Managing Director, Punjab National Bank
— ANI (@ANI) June 5, 2021
பல வங்கிகள் விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கியிருந்தன. அது திரும்ப வராத சூழ்நிலையில், எஸ்பிஐ தலைமையிலான 11 வங்கிகளின் கூட்டமைப்பு மல்லையாவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தை அணுகின. பண மோசடி தொடர்பான வழக்குகளை கையாளும் சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய இந்தக் குழு, மல்லையாவிடம் இருந்து அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்த சொத்துக்களை தங்களுக்கு திருப்பிப் பெற்றுத் தருமாறு கோரியது.
Also Read | Lockdown பொதுமக்களுக்கு மட்டும் தானா? ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இல்லையா?
கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு வழங்கப்பட்ட ரூ .6,900 கோடி அசல் கடனில், ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ .1,600 கோடியை வழங்கியுள்ளது. இது தவிர, கிங்பிஃஷர் விமான நிறுவனத்திற்கு பிற வங்கிகள் கடன் வழங்கியிருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ .800 கோடி), ஐடிபிஐ வங்கி (ரூ .800 கோடி), பாங்க் ஆப் இந்தியா (ரூ. 650 கோடி), பாங்க் ஆப் பரோடா (ரூ .550 கோடி), மத்திய பாங்க் ஆப் இந்தியா (ரூ .410 கோடி).
சுமார் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டை விஜய் மல்லையா எதிர்கொள்கிறார். தற்போது கிங்பிஃஷர் ஏர்லைன்ஸ் செயல்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா 2019 ஏப்ரலில் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். 65 வயதான அவர் தற்போது அங்கே ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை மீண்டும் இந்தி்யா கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Also Read | Success Mantra: சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR