கொரோனா வைரஸ் முழு அடைப்பின் போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரண திட்டங்களை அறிவித்துள்ளது.
அந்த வகையில் ATM-ல் பணம் எடுப்பதற்கான வரம்பை 2020 ஜூன் 30 வரை SBI வங்கி தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, SBI அட்டை வைத்திருப்பவர்கள் சேவை கட்டணம் செலுத்தாமல் 2020 ஜூன் 30 வரை ATM-ல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம். இதேபோல், PNB தனது வாடிக்கையாளர்களுக்கான IMPS கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா முழு அடைப்பின் போது இரு வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற முன்முயற்சியில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தனது சொந்த ATM-களில் மட்டும் அல்லாமல் பிற வங்கி ATM-களில் பணம் எடுத்தாலும் இந்த வரம்பற்ற முறையில் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இருப்பினும், SBI-ன் இந்த வரம்பற்ற ATM பணம் எடுக்கும் வசதி 2020 ஜூன் 30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஜூலை 1, 2020 முதல், அடுக்கு -1 நகரங்களில் உள்ள SBI வாடிக்கையாளர்களுக்கு மூன்று இலவச பணம் எடுக்க அனுமதிக்கப்படும், மற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற நகரங்களில், SBI பற்று அட்டை கொண்டு ATM-ல் பணம் எடுக்கும் வரம்பு 5 மட்டுமே. முழு அடைப்பின் போது SBIதனது வாடிக்கையாளர்களுக்கான SBI குறைந்தபட்ச இருப்பு வரம்பை ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் SBI-யின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பஞ்சாப் நேஷனல் வங்கி IMPS (உடனடி கட்டண சேவை) கட்டணத்தை தள்ளுபடி செய்ததாக அறிவித்துள்ளது. இதுகுறித்து PNB வங்கி தனது ட்விட்டர் கைப்பிடிப்பில் குறிப்பிடுகையில்., "இன்டர்நெட் வங்கி மற்றும் மொபைல் வங்கி பயன்பாட்டின் மூலம் நிகழ்த்தப்படும் பரிவர்த்தனைகளுக்கான IMPS கட்டணங்களை தள்ளுபடி செய்யப்டுகிறது. இது உடனடியாக அமல்படுத்துகிறது" என்று மேற்கோளிட்டுள்ளது.
முன்னதாக, PNB தனது வாடிக்கையாளர்களிடமிருந்து IMPS கட்டணமாக ரூ.5 வசூலித்தது, இந்த பணம் வாடிக்கையாளர்களின் சேமிப்பு அல்லது பிற PNB கணக்கிலிருந்து குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.