SIP Investment Tips in Tamil: நடுத்தர வர்க்கத்தினருக்கு, பணத்தை சேமிப்பது என்பது எப்போதுமே கொஞ்சம் சவாலான காரியமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள், அதிகரித்து வரும் விலைவாசி, குழந்தைகளின் கல்வி செலவு என, வாங்கிய சம்பளம் உடனே கரைந்து போகும் நிலை தான் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில், புத்திசாலித்தனமாக பணத்தை சேமித்தால், பணத்தை எளிதாக பன்மடங்காக்கலாம். இப்போது பன்மடங்கு வருமானத்தை கொடுக்கும் பல முதலீட்டு வாய்ப்புகள் நமக்கு முன்னால் உள்ளன. அதில் ஒன்றுதான் பரஸ்பர நிதியம் என்னும் SIP முதலீடு. அதிகம் இல்லை மாதம் ரூபாய் 2000 கூட தேவை இல்லை ரு.1000 சேமித்தால் கூட, நீங்கள் ஓய்வு பெறும் போது கோடீஸ்வரனாக இருக்கலாம்.
பாதுகாப்பான முதலீடு
பாதுகாப்பான முதலீட்டிற்கு, நம் மனதில் முதலில் தோன்றுவது வங்கி அல்லது தபால் நிலையங்களில் செய்யப்படும் FD முதலீடுகள். அதிலிருந்து பெறும் வட்டியினால், பெரிய அளவில் நிதி எதையும் சேமிக்க முடியாது. ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, தைரியமாக மியூச்சுவல் ஃபண்டுகளில், அதாவது பரஸ்பர நிதியங்களில் பணத்தைப் போட்டால், ஆயிரத்தை கோடிகள் ஆக்கலாம். இன்றைய காலகட்டத்தில், ரூபாய் 1000 அல்லது 2000 சேமிப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. இந்த அளவிற்கு தாராளமாக ரிஸ்க் எடுக்கக்கூடிய நிலைமை நிச்சயமாக நமக்கு உண்டு. சேமிக்க முடியவில்லை என்று கூறுவது ஒரு சாக்குப் போக்கு தான்.
பரஸ்பர நிதியம் Vs போஸ்ட் ஆபீஸ் முதலீடு
உதாரணத்திற்கு, நீங்கள் வங்கி அல்லது தபால் நிலையங்களில், மாதம் ₹ 1000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனால் பெரிய அளவில், நிதியை சேமிக்க முடியாது. ஆனால், மாதம் ₹ 1000 என பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால், மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கலாம். சில பரஸ்பர நிதியங்கள், 20% வரை வருமானத்தை கொடுத்துள்ளன. முதலீடுகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து, ஆலோசனை பெற்று அவர்கள் மூலம், தேர்ந்தெடுத்து செய்யப்படும் முதலீடுகளால், நீங்கள் கோடீஸ்வரன் ஆகலாம்.
20 ஆண்டுகளுக்கு, மாதம் ₹1000 முதலீடு
எஸ்ஐபி மூலம், மாதம் ₹ 1000 முதலீடு செய்யும் போது, மிகக் குறைந்த அளவாக 12 சதவீத வருமானம் என்று கலக்கிட்டால் கூட, சுமார் பத்து லட்சம் உங்கள் கையில் இருக்கும். 20 ஆண்டுகளில் நீங்கள் செய்துள்ள மொத்த முதலீடு, ₹ இரண்டு லட்சத்து 40 ஆயிரம் மட்டுமே. அதற்கு நீங்கள் 15 % வருமானம் என கணக்கிட்டால் ₹ 15 லட்சத்திற்கு மேல் உங்கள் கையில் இருக்கும். அதே சமயம் சதவிகித வருமானம் என கணக்கிட்டால், உங்கள் கையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் ₹32 லட்சம் கையில் இருக்கும்.
30 ஆண்டுகளுக்கு மாதம் ₹1000 தொடர் முதலீடு
நீங்கள் 30 வருடங்களுக்கு, மாதம் ₹1000, முதலீடு செய்து வந்த நிலையில், 15 % வருமானம் என கணக்கிட்டால், உங்கள் கையில் ₹70 லட்சம் இருக்கும். அதே நேரத்தில், முதலீட்டு நிபுணர்கள் ஆலோசனையுடன், திறமையாக கணக்கிட்டு முதலீடு செய்து வந்தால், 20% வருமானம் கிடைக்கும். மாதம் ₹1000 முதலீட்டில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ₹2 கோடியே 33 லட்சம் உங்கள் கையில் இருக்கும்.
குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் முன், நிதி ஆலோசகரின் உதவியைப் பெறுவதன் மூலம் சிறந்த வகையில் பயன் அடையலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ