பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம் ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ...

SIP Investment Tips: முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 6, 2024, 04:11 PM IST
  • 15x15x15 ஃபார்முலாவை பின்பற்றி சேமித்து வந்தால், வெறும் 15 ஆண்டுகளில் ரூ.1 கோடியை சேமிக்கலாம்.
  • முதுமை காலத்தில் வழக்கமான வருமானம் கிடைக்கும்.
  • ஒரு லட்சம் ஓய்வூதியம் எவ்வளவு சேமிக்க வேண்டும்?
பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம்  ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ... title=

முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். வேலையில் சேர்ந்தவுடன்  இளம் வயதிலிருந்தே சேமிப்பது நல்லது. இல்லை என்றாலும் குறைந்தது 40 வயதில், திட்டமிட்டு சேமிக்கத் தொடங்கினால், பென்ஷன் இல்லை என்ற கவலை இல்லாமல், சிறந்த வகையில் முதுமை காலத்தில் வழக்கமான வருமானம் கிடைக்கும். 

SIP முதலீடு: 15x15x15 ஃபார்முலா

உங்களது 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் 55 வயது வரை, 15x15x15 ஃபார்முலாவை பின்பற்றி சேமித்து வந்தால், வெறும் 15 ஆண்டுகளில் ரூ.1 கோடியை திரட்டி, 55 வயது முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் பென்ஷன் பெறலாம்.  வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் 15x15x15 சூத்திரம் பரஸ்பர நிதிகளில் SIP உடன் தொடர்புடைய முதலீட்டு ஃபார்முலா. அதாவது 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும்.  இந்த முதலீட்டில் 15 சதவீத வருடாந்திர வட்டி பெறப்பட வேண்டும்.

ஒரு லட்சம் ஓய்வூதியம் எவ்வளவு சேமிக்க வேண்டும்?

பொதுவாக, ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் 30 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, உங்கள் சம்பளம் தற்போது மாதம் ரூ.50 ஆயிரம் என்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.15 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு SIP மூலம் பரஸ்பர நிதிகளில் மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும்.

15 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகலாம்

சராசரியாக, 15 சதவீத வருடாந்திர வட்டியில், முதலீட்டாளர் 15 ஆண்டுகளில் சுமார் 1 கோடி பெறுவார். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.27 லட்சம் மட்டுமே என்பது சிறப்பு. இப்போது இந்த ரூ.1 கோடியை சிஸ்டமேடிக் வித்ட்ராவல் பிளானில் (SWP) வைப்பதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் ஓய்வூதியமாகப் பெறலாம்.

மேலும் படிக்க | பெண்களுக்கு சிறப்பு திட்டம்! ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெற முடியும்!

SIP என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான எளிதான வழி எஸ்ஐபி. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். SIP என்பது ஒரு வங்கி RD போன்றது. ஆனால் இங்கே நீங்கள் வங்கியை விட சிறந்த வருமானத்தைப் பெறுவீர்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு SIP என்னும் சிஸ்டமேடிக் இன்வெஸ்மெண்ட் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.

குறிப்பு:  முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை முதலீட்டு முறைகள் குறித்து நிதி ஆலோசகருடன் விரிவாக ஆலோசனை செய்து அதுகுறித்து தெரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | மாதா மாதம் ரூ.61,000 வரியில்லா ஓய்வூதியம், கோடிகளில் கார்ப்பஸ்: இன்றே முதலீடு செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News