பணத்தை பன்மடங்காக்கும் ‘சில’ சிறந்த முதலீட்டு திட்டங்கள்!

நீங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, அதிக வட்டியும் கிடைக்கும் சில சிறந்த சேமிப்பு திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 7, 2023, 09:11 PM IST
  • முதலீட்டிற்கான சிறந்த திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவது போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டமாகும்.
  • வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் குறிப்பிடத்தக்க வரி சேமிப்பு.
  • தங்கப் பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன.
பணத்தை பன்மடங்காக்கும் ‘சில’ சிறந்த முதலீட்டு திட்டங்கள்! title=

சிறந்த முதலீட்டுத் திட்டங்கள்: ஆபத்து கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருக்கும் குறைந்த ஆபத்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். இதில் குறைந்த முதலீடு செய்வதோடு, குறைவான அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே சமயத்தில், வட்டியும் அதிகம் கிடைக்கும். இன்று இதுபோன்ற சில முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்

1. தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டங்கள் (Post Office Monthly Income Schemes)

பொதுவாக முதலீட்டிற்கான சிறந்த திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவது போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் (Post Office Schemes) திட்டமாகும். இது நல்ல வருமானத்துடன் குறைந்த ரிஸ்க் முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டங்களின் வருமானம் முழுமையாக வரி விதிப்பிற்கு உட்பட்டது என்றாலும், மாதாந்திர வருமான திட்டங்களுக்கு மூலத்தில் (TDS) கழிக்கப்படும் வரி  இல்லை.

2. சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Yojana)

செல்வ மகள் சேமிப்பு திட்டம்  இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் (Investment Tips) ஒன்றாகும். உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால், இந்த திட்டம் பெண் குழந்தையின் வருங்கால கல்வி மற்றும் திருமணத்திற்கான நிதியை சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் தொடங்கலாம். கூடுதலாக, நீங்கள் வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் குறிப்பிடத்தக்க வரி சேமிப்பு 4 ஐப் பெறலாம்.

மேலும் படிக்க | இல்லத்தரசிகளே... ‘இந்த’ டிப்ஸ்களை ஃபாலோ பண்ணா... நிதி தட்டுபாடே இருக்காது!

3. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இந்தியாவின் சிறந்த முதலீட்டு திட்டங்கள் ஒன்றாகும். அதன் கீழ் வழங்கப்படும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு இது மிகச் சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. PPF பல நன்மைகளை வழங்குகிறது. அதே நேரத்தில் PPF மீதான வட்டி வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை. வருமான வரி 1961 இன் பிரிவு 80C இன் கீழ் நீங்கள் வரி விலக்கும் பெறலாம்.

4. வரி சேமிப்பு FD (Tax Saving Fixed Deposit- FD)

வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகை (FD) இந்தியாவின் சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக பலரால் கருதப்படுகிறது, ஏனெனில் இது பிரிவு 80C இன் கீழ் குறிப்பிடத்தக்க வரி சேமிப்பு நன்மைகளை வழங்குகிறது மற்றும் உங்கள் வரிப் பொறுப்பைக் குறைக்க உதவுகிறது.

5. தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond)
 
தங்கப் பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. SGBகள் தங்க சேமிப்பகமாக செயல்படுகிறது. தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். தங்கப் பத்திரத்துக்கு ஜிஎஸ்டி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமும் கிடைக்கும். தங்க நகைகள் வாங்கும் போது ஏற்படும் செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் இல்லை. தங்கத்தை பாதுகாப்பாக சேமிப்பதில் இருக்கும் கவலை எதுவும் தங்கப் பத்திரத்தில் கிடையாது. தங்கத்தின் தேவையை குறைப்பதே தங்கப் பத்திரத் திட்டத்தின் நோக்கம். எனவே அரசு தங்கத்தை சந்தை விலையை விட குறைந்த விலைக்கு விற்கிறது.

மேலும் படிக்க | மருத்துவ கூரியர் சேவை: ₹7 லட்சம் முதலீட்டில் மாதந்தோறும் ₹1-2 லட்சம் சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News