உலகம் முழுவதும் மின்சார வாகனம் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுப் புற சூழல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு பெருமளவில் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த சூழலில் சுவிட்சர்லாந்தில் மட்டும் மின்சார வாகன உபயோகத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணம் என்ன என்று பார்க்கும்போது, நாட்டில் நிலவும் எரிசக்தி தட்டுபாடு என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | காஷ்மீரில் கிடைத்த லிதியம் புதையல் இந்தியாவின் தலைவிதியை மாற்றுமா..!
The Telegraph-ன் அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்தில் எரிசக்தி நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் மின்சார பயன்பாட்டை குறைக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, மின்சார வாகனங்களின் உபயோகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டை பொறுத்தவரை தனது மின் தேவையில் 60 சதவீதத்திற்கு நீர்மின் நிலையங்களை நம்பியிருந்தாலும், குளிர்காலத்தில் இந்த மின் உற்பத்தி நிலையங்களின் ஆற்றல் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகிறது.
இதனால் மின் உற்பத்திக்கு இறக்குமதி ஆற்றலை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு சுவிட்சர்லாந்து தள்ளப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் மின் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் ஏற்கனவே பெருமளவு அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போது உக்ரைனில் நடந்த போர் சுவிஸ்சர்லாந்தில் எரிசக்தி நெருக்கடியை மேலும் அதிகரித்திருக்கிறது. இதனை கருத்தில் கொண்ட அந்நாடு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. இரண்டு வகையில் நடைமுறைக்கு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, நாட்டின் மின்சார சூழலுக்கு ஏற்ப மின்சார வாகனங்கள் உபயோகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் மின்சார உபயோகத்துக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை பொறுத்தவரை தற்காலிகமான ஒன்றுதான். மின்தேவை பூர்த்தியடைந்தால் அல்லது இயல்பு நிலைக்கு திரும்பினால் இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படும்.
மேலும் படிக்க | ’லித்தியம் புதையல்’ ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிப்பு..! 5.9 மில்லியன் டன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ