Kalaignar Magalir Urimmai Thogai: கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கான மேல்முறையீடு செய்யவதற்கான காலக்கெடு முடிந்தபிறகு, தமிழ்நாடு அரசு அதுதொடர்பான பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சிக்கான முதலீடாக தமிழக அரசு கருதும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, அமைச்சர்களும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த பெண்களில் சிலரின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை, இது தொடர்பான புகார்கள் எழுந்ததை அடுத்து, ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்காதவர்கள் என, இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்க அரசு அவகாசம் வழங்கியிருந்தது.
மேல்முறையீட்டு விண்ணப்பம் அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் என தமிழக அரசு அதிகாரிக்கள் பரிசீலித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிர்களிடம் அமைச்சர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அமைச்சர் எடுத்துக் கூறியபோது, அதன் நியாயத்தை உணர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின், அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது.
தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட… pic.twitter.com/wNiteQzYbb
— Udhay (@Udhaystalin) October 26, 2023
தமிழ்நாடு அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.என்றால், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் இரண்டாவது நோக்கமாகும்.
மேலும் படிக்க | இனி பாதி பேருக்கு 1000 ரூபாய் வராது... குண்டை தூக்கிப்போடும் குஷ்பு - காரணம் இதுதான்
உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்க்கின்றனர். குடும்பத்திற்காகவும், குடும்பத்தின் வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் பெண்கள் தினசரி ஒரு நாளைக்குப் பல மணி நேரம் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பெண்களின் இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும். இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசு இட ஒதுக்கீடு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெண் உரிமை போற்றிட, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் லிஸ்டில் இருந்து பெயர் நீக்கம்! காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ