MCLR-ஐ உயர்த்தியது யெஸ் வங்கி...கடன்களுக்கான EMI-கள் உயருமா?

ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருட காலத்திற்கு யெஸ் வங்கியின் எம்சிஎல்ஆர் விகிதங்கள் முறையே 8.70 சதவீதம் மற்றும் 8.95 சதவீதம் ஆகும்.  

Written by - RK Spark | Last Updated : Jul 2, 2022, 06:26 PM IST
  • யெஸ் வங்கி எம்சிஎல்ஆர் விகிதங்கள் உயர்வை ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
  • வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் சிறிய செலவு தொடர்பான பிற கடனுக்கான இஎம்ஐ-களும் அடங்கும்.
  • ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் யெஸ் வங்கியின் அடிப்படை விகிதம் 8.75 சதவீதம் என்று தெரிவித்திருந்தது.
MCLR-ஐ உயர்த்தியது யெஸ் வங்கி...கடன்களுக்கான EMI-கள் உயருமா? title=

பிரபலமான தனியார் வங்கியான யெஸ் வங்கி தற்போது எம்சிஎல்ஆர் விகிதங்களை அதிகரித்துள்ளது, புதிய யெஸ் வங்கி எம்சிஎல்ஆர் விகிதங்களை உயர்த்துவது குறித்து கடன் வழங்குபவரின் இணையதளத்தில் குறிப்பிட்டபடி, இந்த நடவடிக்கை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது.  புதிய யெஸ் வங்கி எம்சிஎல்ஆர் விகிதங்கள் உயர்வை ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.  யெஸ் வங்கியின் எம்சிஎல்ஆர் விகித உயர்வானது, புதிய மற்றும் ஏற்கனவே உள்ள கடன் வாங்குபவர்களுக்கான கடன் வட்டிகள் அதிகரிக்கப்படுவதைக் குறிக்கும்.  இதில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் சிறிய செலவு தொடர்பான பிற கடனுக்கான இஎம்ஐ-களும் அடங்கும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: பம்பர் டிஏ உயர்வு, ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்

ரிசர்வ் வங்கி அதன் ரெப்போ விகிதங்களை உயர்த்தியதன் மூலம் ஏற்படும் நேரடி விளைவு தான் இது, ஏனெனில் ரெப்போ விகிதத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தாலும் அது மார்ஜினல் காஸ்ட்டை பாதிக்கும், எனவே எம்சிஎல்ஆர்-ஐ மாற்றும்.  ஒரே இரவில், ஒரு மாதம் மற்றும் ஆறு மாதங்களுக்கு யெஸ் வங்கி எம்சிஎல்ஆர் விகிதங்களை 7.60%, 7.90% மற்றும் 8.25% என உயர்த்தியுள்ளது.  ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருட காலத்திற்கு யெஸ் வங்கி எம்சிஎல்ஆர் விகிதங்கள் முறையே 8.70 சதவீதம் மற்றும் 8.95 சதவீதம் ஆகும்.  தற்போதைய மாற்றத்தின்படி புதிய விகிதம் - 7.60 %, ஒரு மாதம் : புதிய விகிதம் - 7.90 %, மூன்று மாதங்கள் : புதிய விகிதம் - 8.25 %, ஆறு மாதம்:  புதிய விகிதம் - 8.70 %, ஒரு வருடம் : புதிய விகிதம் - 8.95 %ஆகும் 

ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் யெஸ் வங்கியின் அடிப்படை விகிதம் 8.75 சதவீதம் என்று வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தது.  மறுபுறம், ஜூலை 26, 2011 முதல் யெஸ் வங்கியின் பிபிஎல்ஆர் விகிதம் 19.75 சதவீதமாக இருந்தது என்றும் கூறியிருந்தது.  ஏப்ரல் 01, 2022 முதல், வங்கியானது 6 மாத டெபாசிட் சான்றிதழில் இருந்து ஆர்பிஐ ரெப்போ விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.  எம்சிஎல்ஆர் அல்லது மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரெட் என்பது ஒரு முக்கிய வட்டி விகிதமாகும், இது வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்க அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: பம்பர் டிஏ உயர்வு, ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News