கர்நாடக சட்டமன்ற தேர்தல் விரைவில் வருவதையொட்டி ஆளும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது!
தமிழகத்தில் நடைப்பெற்று வரும் அம்மா உணவகம் போல், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கடந்த 16-8-2017 அன்று மளிவு விலை உணவகமான இந்திரா உணவகத்தினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கி வைக்க, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் துவக்கியது கர்நாடக அரசு.
இந்த உணவகத்தில் காலை சிற்றுண்டி வெரும் 5 ரூபாய்க்கும் இரவு உணவு 10 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாம்ராஜ்நகர் மாவட்டம், கொல்லேகாலா பகுதியில் இன்று மேலும் ஒரு இந்திரா உணவகத்தை திறந்து வைத்தார்.
அந்த உணவகத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உணவு உண்டார்.
Karnataka: Congress President Rahul Gandhi inaugurated Indira Canteen in Kollegala. pic.twitter.com/fT04rpM5Lh
— ANI (@ANI) March 24, 2018
முன்னதாக கடந்த பிப்., 27 ஆம் நாள், வாகனங்களின் மூலம் இயக்கப்படும் மொபைல் உணவகம் ("சவிருச்சி கேண்டின்") திட்டத்தினை மகளிர் சுய உதவி குழுக்களுக்காக அறிமுகம் செய்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள்!