இன்று ஆடி அம்மாவாசை- சிறப்புக்கள் என்ன?

Last Updated : Jul 23, 2017, 12:23 PM IST
இன்று ஆடி அம்மாவாசை- சிறப்புக்கள் என்ன? title=

அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி மாத வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாளும் அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு. 

பொதுவாக அம்மாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் காலம். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரனகிய சூரியனும் இந்து கலாச்சாரத்தில் வணங்ககூடியவர்கள்.

இன்று ஆடி அமாவாசை ஆகும். அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். 

அமாவாசையில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆடி மாதமும், தை மாதமும் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும், பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.

ஆடி, அமாவாசையன்று, `பித்ரு' எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.

அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதன் மூலம் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். ஆண்டுக்கொரு முறை அவர்களது திதி நாளில் திவசம், சிரார்த்தம் செய்தாலும் மாதந்தோறும் அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்வது புண்ணிய காரியமாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமாகும்.

ஆடி மாதம் வரும் அமாவாசையின் சிறப்பு என்ன?

ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடன் ஒரே நேர் கோட்டில் அமையும் தினமே ஆடி அமாவாசை. ஆடி அமாவாசையில் நம் முன்னோர்களை நினைத்து வணங்குதல் சிறப்பு. காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு தர்ப்பணம் செய்து விசேசமாகும்.

தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்று அடைகிறது என்பது ஐதீகம்.

Trending News