CBSE 12th Board Exam: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு 2021 ரத்து செய்யப்படாது எனத் தகவல்

கோவிட் -19 விதிமுறை நடைமுறையில் இருந்த போது கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு (CBSE Class 12th Board Exam 2021) நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 24, 2021, 07:42 PM IST
  • தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசுக்கும் மாநில அரசிற்கும் இடையே உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
  • ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தகவல்.
  • வாரியம் தேர்வு 2021 மற்றும் பிற தேர்வுகள் குறித்த தங்கள் கருத்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவிக்கலாம்.
CBSE 12th Board Exam: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு 2021 ரத்து செய்யப்படாது எனத் தகவல் title=

புதுடெல்லி: கோவிட் -19 விதிமுறை நடைமுறையில் இருந்த போது கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு (CBSE Class 12th Board Exam 2021) நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசுக்கும் மாநில அரசிற்கும் இடையே உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளின் அட்டவணை மற்றும் தேதிகள் குறித்து கூடுதல் தகவல்களை விரைவில் வழங்குவார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் 19 முக்கிய தித் தலைப்புகளில் சிபிஎஸ்இ வாரிய தேர்வுகளை நடத்துவதற்கான விருப்பம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கு பல மாநிலங்கள் ஆதரவு அளித்தன. சில பாடங்களுக்கான உள் மதிப்பீடு (Internal Assessment) தேர்வு தனியாக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 

ALSO READ |  CBSE பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா; பள்ளிகள் கூறுவது என்ன?

இந்த கூட்டத்தில் மற்றொரு முக்கிய முடிவுக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முக்கிய பாடங்களுக்கு 90 நிமிடம் என்ற அடிப்படையில் தேர்வுகளை நடத்தலாம் என்ற ஆலோசனையும் வைக்கப்பட்டது. இந்த விருப்பங்கள் குறித்து வரும் வாரங்களில் கருத்து தெரிவிக்க அனைத்து மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக விரிவான விளக்கம் விரைவில் வெளியிடப்படும்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வந்த பிரச்சனைக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் (Teachers) தரப்பில் 12 ஆம் வகுப்பு தேர்வை (Board Exam 2021) ரத்து செய்யப்பட வேண்டும் பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ALSO READ |  CBSE பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா; மாநிலங்கள் கூறுவது என்ன?

இதற்கிடையில், வாரியம் தேர்வு 2021 மற்றும் பிற தேர்வுகள் குறித்த தங்கள் கருத்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளுமாறு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் (Parents) மற்றும் கல்வியாளர்களுக்கும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் சிபிஎஸ்இ வாரிய தேர்வு 2021 குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு விரிவான ஆலோசனை செய்த பிறகே, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது" என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி அமைச்சர் (Education Minister) ரமேஷ் போக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (Smruti Irani) மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javadekar) கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர, அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், கல்வி செயலாளர்கள் மற்றும் மாநில தேர்வு வாரியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ALSO READ |  CBSE 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முக்கிய சந்திப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News