2019 சிபிஎஸ்இ சிடிஇடி Key Answer வெளியிடப்பட்டது; link இணைப்பு

28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய சிபிஎஸ்இ சிடிஇடி தேர்வின் Key Answer முடிவு இன்று வெளியிடப்பட்டது. எப்படி சர்பார்ப்பது?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2019, 03:30 PM IST
2019 சிபிஎஸ்இ சிடிஇடி Key Answer வெளியிடப்பட்டது; link இணைப்பு title=

புது டெல்லி: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடிஇடி (CTET) என்னும் தகுதித் தேர்வினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE ) நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு 2019 டிசம்பர் 8, 2019 அன்று நாடு முழுவதும் 110 நகரங்களில் நடத்தப்பட்டது. அதற்கான answer key முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது என்று விளக்கப்பட்டு உள்ளது. அதற்கான நேரடி இணைப்பு லிங்க் இங்கே கீழே தரப்பட்டு உள்ளது. 

CTET சான்றிதழ் கற்பித்தல் வேலையைப் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி ஆகும். தேர்வு எழுதியவர்கள் சான்றிதழ் பெற்றதும், கே.வி.எஸ் (KVS) என்.வி.எஸ் இராணுவ ஆசிரியர் (NVS Army Teacher) ஈஆர்டிஓ (ERDO) போன்ற பல்வேறு பள்ளிகளால் ஆசிரியர் காலியிடங்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிபிஎஸ்இ சிடிஇடி 2019 தேர்வு டிசம்பர் 8 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் 110 நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் சுமார் 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் பணியில் சேர குறைந்தபட்ச ஆசிரியர் தகுதிச் சான்றிதழை வழங்குவதற்காக CTET தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.

Answer key முடிவை எப்படி சர்பார்ப்பது:

சிபிஎஸ்இ சிடிஇடி முடிவு 2019-ல் தேர்வு எகுதியவர்கள், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி சிடிஇடி Answer key முடிவை தெரிந்துக்கொள்ளலாம். 

லிங்க் இணைப்பு

இந்த லிங்கை திறந்தவுடன், உங்கள் அவர்கள் பிறந்த தேதி மற்றும் ரோல் எண்ணை தட்டச்சு செய்ய வேண்டும்.

சிபிஎஸ்இ சிடிஇடி 2019: Answer key சரிபார்க்கும் படிகள்:

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், அதாவது ctet.nic.in

படி 2: முகப்புப்பக்கத்தில், "சிபிஎஸ்இ சிடிஇடி 2019 Answer key என்று இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்க.

படி 3: புதிய பக்கம் தோன்றும்

படி 4: இணைப்பைக் கிளிக் செய்து, சி.டி.இ.டி அதிகாரப்பூர்வ Answer key 2019 திரையில் காண்பிக்கப்படும்

படி 5: அதைப் பதிவிறக்கம் செய்து எதிர்காலத்திற்காக அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்

படி 6: 2019 CTET Answer key ஏதாவது குளறுபடி இருந்தால், உங்கள் ஆட்சேபனைகளை எழுப்புங்கள்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News