60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஈரோடு மாவட்டத்தில் அரசு வேலை

6 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் ஈரோடு மாவடத்தில் அரசு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 15, 2022, 06:25 PM IST
 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஈரோடு மாவட்டத்தில் அரசு வேலை title=

தமிழக அரசின் கீழ் இயங்கும் ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் Medical Officer, Staff Nurse/ MLHP பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் பிரபலமாக இருக்கும் பன்னாரி அம்மன் கோவிலில் இந்த காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆகியப் பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பப்பட இருக்கின்றன.

காலிப் பணியிடங்கள்

மருத்துவ அலுவலர் - 2
செவிலியர் - 2
பல்நோக்கு மருத்துவ பணியாளர் - 2

மேலும் படிக்க | NABARD Recruitment: நபார்ட் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு! அதிகபட்ச வயது 60

வயது

மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியருக்கு அதிகபட்சம் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணிக்கு 40 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம்

மருத்துவ அலுலவர் - ரூ.60,000
செவிலியர் -  ரூ.14,000
பல்நோக்கு மருத்துவ பணியாளர் - ரூ.6000

இந்தப் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Erode Bannari Mariamman Temple Jobs 2022-க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணபிப்பது? 

அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://hrce.tn.gov.in/-க்கு செல்லவும். Bannari Mariamman Temple Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ Erode Bannari Mariamman Temple Vacancy 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

ஆப்லைன் மற்றும் ஆன்லைன் மூலமும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க  | வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்..SBI வழங்கும் ஆஃபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News