JEE Advance Result 2022: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள்

IIT பாம்பே JEE அட்வான்ஸ் 2022 தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeeadv.ac.in ஐப் பார்வையிடுவதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 11, 2022, 12:42 PM IST
  • ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள்
  • மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி
JEE Advance Result 2022: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் title=

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 முடிவு: இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) பாம்பே கூட்டு நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 முடிவு) முடிவை வெளியிட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விண்ணப்பதாரர்கள் jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த முடிவுடன் ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 தகுதிப் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மொத்தம் 160038 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து, 155538 பேர் இரு தாள்களுக்கும் தேர்வாகினர், அவர்களில் 40712 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 முடிவை எவ்வாறு சரிபார்க்கலாம்?
jeeadv.ac.in இல் ஜேஇஇ அட்வான்ஸ்டு அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும். இங்கே நேரடியாக கிளிக் செய்வதன்
மூலமும் முடிவைப் பார்க்கலாம். இந்தப் பக்கத்தில் உள்நுழைவு விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். உங்கள் முடிவு உங்கள் திரையில் காண்பிக்கப்படும். தேர்வு முடிவு மற்றும் பதிவிறக்கப் பக்கத்தை இங்கே பார்க்கவும். மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் மற்றும் இறுதி விடைக் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வீட்டில் உயிரிழந்த தந்தையின் உடல் - 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மகன்

ஐஐடி பாம்பே மண்டலத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஷிஷிர் பொது தரவரிசைப் பட்டியலில் (சிஆர்எல்) முதல் இடத்தில் உள்ளார். 360 மதிப்பெண்களுக்கு 314 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதே சமயம் பெண்கள் பட்டியலில் தனிஷ்கா கப்ரா முதலிடம் பிடித்துள்ளார். ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்தவர் தனிஷ்கா. டாப்-10 டாப்பர்களின் பட்டியலை இங்கே பாருங்கள்.

1. ஆர்.கே.ஷிஷிரோ
2. போலு லக்ஷ்மி சாய் லோஹித் ரெட்டி
3. தாமஸ் பிஜு சிரம்வெளி
4. வாங்கப்பள்ளி சாய் சித்தார்த்தா
5. மயங்க் மோத்வானி
6. பாலிசெட்டி கார்த்திகேயா
7. பிரதீக் சாஹு
8. தீரஜ் குருகுந்த்
9. மஹித் கர்ஹிவாலா
10. வெச்ச ஞான் மகேஷ்

இதனிடையே தகுதி பட்டியலில் இடம்பெற்றவர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி நாளை நடத்தப்படும் கூட்டு இருக்கை ஒதுக்கீடு (ஜோசா) கலந்தாய்வுக்கு தகுதிபெற்றவர்கள். இந்த JoSAA கவுன்சிலிங் ஆறு சுற்றுகளாக நடத்தப்படும். தேர்வர்கள் ஃப்ரீஸ், ஃப்ளோட் மற்றும் ஸ்லைடு விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒதுக்கீடு முடிவை உறுதி செய்யலாம். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | NEET UG Result 2022 Declared: வெளியான நீட் தேர்வு ரிசல்ட்; எந்த மாநிலம் முதலிடம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News