உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் கண்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஷ்ரா பதவி விலகவுதாக அறிவித்துள்ளார்!
நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கின்றது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வி கண்டார்.
Yogendra Mishra, President of District Congress Committee- Amethi, resigns from the post taking responsibility for the defeat. #ElectionResults2019 pic.twitter.com/cW2ScYjcDM
— ANI UP (@ANINewsUP) May 24, 2019
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மட்டும் சொல்லிக்கொள்ளும் படி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பு ஏற்று உத்திர பிரதேச மாநில தலைவர் ராஜ் பாபர் தனது பதிவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். (பத்தேப்பூர் சிக்கிரியில் போட்டியிட்ட பாபர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடன் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது).
அதேப்போல் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கண்ட வீழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் மூத்த தலைவர் HK பாட்டில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு பெறுப்பு ஏற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நிரன்ஜன் பட்நாயிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் தோல்வியை முன் வைத்து மூத்த தலைவர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். எனினும் இவர்களது ராஜினாமா-வினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுவரை ஏற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.