ராமர் கோயில் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்!
நீண்டகால பிரச்னையான அயோத்தி விவகாரத்தில் ராமர் கோயில் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "ராமர் கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்து மக்களின் நம்பிக்கையான இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமர் கோயில் கட்டுவதிலும் இந்த இடத்தை ஒதுக்குவதிலும் உச்சநீதிமன்ற உத்தரவு தேவையில்லை. யாருடைய அனுமதியும் தேவையில்லை. கடந்த 1993-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் இடம் வழங்குதல் தொடர்பானை வழிமுறை ஆணையை உருவாக்கி உள்ளார். இதனால் அயோத்தி நிலத்தை ராமர் கோயில் கட்ட ஒப்படைக்க வேண்டும்.
மேலும் ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும் சுவாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.